சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியது முதலே தனது சமூகநலம் குறித்த கருத்துக்களை கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்து டுவிட்டர் சண்டியராக வலம் வருகிறார். இதனால் பல அரசியல்வாதிகளின் வெறுப்புக்கும் ஆளாகி வருகிறார். சுப்பிரமணியம் சாமியுடன் ஒரு ‘பொர்க்கி’ போர் நடத்தினார். ஸ்டாலின் சட்டசபை சட்டைக் கிழிப்பின் போது வன்முறையை ஊடகங்கள் பெரிது படுத்தக் கூடாது என்று ட்விட்டினார். இந்த நிலையில் ‘சகலகலா சண்டாளனே’ என்ற கவிதை ஆளும் கட்சி பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரில் வெளிவந்தது. அதை உங்கள் நியூஸ் வெளியிட்டது. (இங்கே காண்க). அதைக் கண்டு மேலோட்டமாக கருத்துக் கூறிவந்த கமல் வெகுண்டெழுந்து அதிமுக ஆட்சி நீடிக்காது என்கிற தொனியில், தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். புதியதலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், மக்கள் விரும்பாத நிலையில் தமிழகத்தில் அரசு நான்கு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும் கட்டாய திருமணம் போல ஆட்சியை ஏன் நீடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான புதிய தலைவரை மக்களே தேர்வு செய்யட்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கமலின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறிய கருத்து ஆளும் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அதிமுக செய்தித் தொடர்பாளர், “கமலின் பகல் கனவு பலிக்காது” என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஸ்வரூபம் திரைப்படம் திரையிட முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா எனவும், அவ்வாறு இருக்கும் போது இந்த ஆட்சி தொடரக்கூடாது என கமல் கூறி வருவது நன்றி மறந்து செயல்படுவது போல் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் கமலுக்கு 65 வயதுக்குப் பிறகே ஞானோதயம் வந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சேலத்தில் கப்ஸா செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், “பெயரளவில் மட்டுமே ஆஸ்கர் நாயகன் நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடிகர் சங்கம் துணை நிற்கும்” என்று கூறினார். மேலும், “அரசையும், முதல்வரையும் விமர்சிப்பது கமலின் தனிப்பட்ட கருத்து” என்றும் விஷால் கூறினார். கமலின் சினிமா மார்க்கெட் காலி… அதனால் தான் சோம்பேறி போராளி அவதாரம் எடுத்தார். அடுத்தது அரசியல் தான்… எல்லாம் போனபின் கமல், என்னைப்போன்ற கூத்தாடிகளின் கடைசி கூத்து, அரசியல் கூத்து தான்…எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த், என் முன்னாள் மாமனார் சரத்குமார், என்ற வரிசை நீள்கிறது… படிக்காத தற்குறியாக மூன்று வயது சிறுவனாக சினிமாவில் நுழைந்த கமல் இன்று ‘தர்க்க’ குறியாக ட்விட்டர் சண்டியராக வலம் வருகிறார். நான் கமலுக்கு ஆதரவளிக்க முக்கிய காரணம், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ‘லிவிங் டுகெதர்’ டெக்னிக்கை நான் வரலட்சுமியை கழற்றி விட ஐடியா கேட்டபோது ஆலோசனை சொன்னதுதான். வேவ்லெந்த் செட்டானாதால் நான் கமலுக்கு சொம்பு தூக்க தயாரக இருக்கிறேன் அதற்கு நடிகர் சங்கத்து பதவியை அனைத்து வகையிலும் பயன்படுத்திக் கொள்வேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet