சென்னை : தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் யார்டு மூலம் மணல் விற்பனை கடந்த 2003 முதல் நடந்து வருகிறது. ஓபிஎஸ் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவரது நண்பரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டிக்கு 25 மணல் குவாரிகள் நடத்தும் ஒப்பந்தம் கிடைத்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி, தன்னை மிரட்டி சசிகலா ராஜினாமா கடிதத்தை வாங்கியதாக ஜெயலலிதா சமாதியில் பேட்டியளித்தார். இதன்பிறகு, அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டு, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

புதிய ரூபாய் நோட்டுக்களை பதுக்கி சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தொழில்அதிபர் சேகர் ரெட்டி மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையினரின் அதிரடி சோதனையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உதவியாக அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு டிச.21-ந் தேதி 3 பெரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரெட்டி மீதான வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது சேகர்ரெட்டிக்கு ஜாமின் மறுத்தது சிபிஐ கோர்ட்டு.

இந்நிலையில் ஆர்கே நகரில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் சார்பாக போட்டியிடும் தனது மணவாடு மது சூதனனுக்காகவும் ஆர் கே நகரில் பிரச்சாரம் செய்ய வசதியாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ரெட்டி மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இவருக்கு ஜாமீன் வழங்க மோடி உத்திரவிட்டதின் பேரில் கர்ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அவருக்கு பிரச்சாரத்திற்கு உதவியாக அவருடன் அவரது நண்பர்களான சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கும் சென்னை சிபிஐ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நாலா முதல் சேகர் ரெட்டி ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும், மணவாடு மது சூதனனுக்காகவும் ஆர் கே நகரில் ஆளுக்கொரு திருப்பதி லட்டும், புதிய 2000 ருபாய் நோட்டு கொடுத்தும் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார் என மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet