சென்னை: மார்ச் 16 அன்று சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி பத்திரிகையாளர்கள் இருந்த இடத்திற்கு சென்றார், அப்போது அங்கு போலீஸ் உயரதிகாரிகள் இருந்தனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக கையில் வைத்திருந்த துண்டு சீட்டில் அவர்களின் பெயர்களை குறிப்பு எடுத்துக் கொண்டார். இதனால் காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த டிசம்பர் மாதம் ஒரே நேரத்தில் இருபெரும் அரசியல் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். ஜெயலலிதா அப்பல்லோவிலும் கருணாநிதி காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மதிமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரக்க காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அவர் வருவதை முன்பே அறிந்த திமுக தொண்டர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். வைகோ கார் மீது கல் மற்றும் செருப்பு வீச்சு நடந்தது. பிரச்சினையை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்காமல் அப்படியே திரும்பி சென்றுவிட்டார். இவை அனைத்தும் ஸ்டாலின்னின் திட்டமிட்ட செயல் என்று அறிந்த வைகோ, “பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் ஸ்டாலின்” என்று வருந்தினார். இதை காவேரி மருத்துவமனையில் உடன்பிறப்புக்கள் மூலம் அறிந்த கருணாநிதி ஸ்டாலினை கடிந்து கொண்டதாக உங்கள் நியூஸ் ஆசிரியரிடம் கப்ஸா நிருபர் நினைவு கூர்ந்தார். மேலும் கப்ஸா நிருபர் கூறியதாவது, ‘இந்த நிகழ்வுக்குப் பிறகு கருணாநிதி வைகோவை சந்திக்க முடியாமல் போனதால் சொல்லொணா துயரத்திற்கு ஆளானதாகவும், கோப்பெருன்சோழன் – பிசிராந்தையார் நட்பு போல சந்திக்க முடியாத நட்பாக வைகோவின் நட்பு ஆகிவிட்டதே என்று மனம் நொந்ததாலேயே உடல் நலம் தேறாமல் படுத்த படுக்கையாக இருப்பதாக கூறினார்.

மேலும் தொண்டர்களை ஸ்டாலின் வைகோவின் பின்னால் பாட்டா செருப்புடன் அனுப்பி விட்டதால், தனக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்ல ஆளில்லாத நிலை கருணாநிதிக்கு வந்துவிட்டதால், சட்ட சபையில் தன்னை தூக்கிச்சென்ற காவலர்களை பேட்டா கொடுத்து வேலைக்கு அமர்த்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கப்ஸா நிருபர் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet