சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு பக்கப்பலமாக அவருடைய கணவர் மாதவன் இருந்து வந்தார். பேரவை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஏகப்பட்ட சர்ச்சைகள் நடந்தேறி வருகின்றன. அந்தக் கட்சியில் நடைபெற்றுவரும் திடீர் குழப்பங்களாலும், அறிவிப்புகளாலும் தொண்டர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகினர். இதனிடையே, தீபாவுக்கும் அவரது கணவரான மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், மாதவன், கட்சிப் பணியைக் கவனிக்க மறுக்கிறார் எனவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் மார்ச் 17 இரவு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தார். சமாதியில் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் கப்சா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். “தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஊடுருவி உள்ளன. குறிப்பாக பேரவையில், தீபா ஒரு தீய சக்தி நான் மற்றுமொரு தீய சக்தி.. தீபாவை இயக்கும் சில சக்திகள் என் வசம் வந்துவிட்டதால் தைரியமாக தனி கட்சி தொடங்க முடிவெடுத்தேன். தவிர ஒரே பேரவையில் இரண்டு தீய சக்திகள் இருப்பது பலனளிக்காது. எங்களுக்கு அரசாங்க கஜானாவை பார்த்தால் நாவில் எச்சில் ஊறுகிறது. தீபாவிற்கு உடனடி தேவை “என்னைப் பிரிந்து தன்னுடன் வாழத்தயாராகும் உடன் பிறவா சகோதரி” அது பற்றி தீபாவே முடிவெடுப்பார். 

ஜெயாவை பின்னிருந்து இயக்கிய சக்தி சின்னம்மா. சின்னம்மாவை இயக்கும் தினகரன், திவாகரன். இவர்களை இயக்கும் சக்தி, நடராஜன். இவர்கள் அனைவரையும் இயக்கும் சக்தி ஊழல் வருமானம். மொத்தத்தில் இந்த தீய சக்தி என்றாலே எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. தீய சக்திகளுக்கெல்லாம் மொத்த உருவமான சின்னம்மாவைஸ் சிறையில் ரகசியமாக சந்தித்தேன், அவர் என் அக்கவுண்டில் மொத்தமாக ஒரு அமவுண்ட் போட்டு விட்டார். சின்னமம்மி பணம் கொடுத்து குட்டிமம்மி தீபாவை டம்மியாக்கச் சொன்னார்கள் என்னால் மறுக்க முடியவில்லை.” என்றார். இந்த நிலையில் அம்மா சமாதியை கொஞ்ச நாளைக்கு பூட்டி வைக்க சின்னம்மா உத்தரவிட்டதாக தெரிகிறது. கப்ஸா நிருபர் விசாரித்ததில் மாதவனை சின்னம்மாவின் தீய சக்தி இயக்குவதால், அவரது மைத்துனர் புதிய இயக்கம் ஒன்றை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet