சென்னை: ஆர்கே நகர் தொகுதி பாஜக வேட்பாளராக திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரன் திமிழிசை சவுந்தரராஜனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பின்னர் தமிழிசை நிருபர்களிடம் கங்கை அமரனை வேட்பாளராக தேர்ந்தெடுத்த மோடிஜிக்கு நன்றி. தமிழகத்தில் தாமரை மலர இது ஒரு முன்னோட்டம். நியாயத்தை நிலைநாட்ட ஆர்கே நகரில் இதுவரை நடந்த இடைத்தேர்தல் சரித்திரம் மாற்றி எழுதப்படும். இதுவரை பாட்டுப்பாடி, இசையமைத்து, படமெடுத்து மக்கள் சேவை செய்துவந்த கங்கை அமரன் இனி அரசியல் சேவை செய்ய வந்துள்ளார். அப்பழுக்கற்ற அவரை ஆர்கே நகர் மக்கள் ஆதரிக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து கங்கை அமரன் கப்சா நிருபரிடம் பேசுகையில், “நான் எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்தில் சன்-சிங்கர் போல ஒரு நிகழ்ச்சியின் நடுவர் இருக்கையில் அமர்ந்திருப்பது போல் கனவு கண்டேன். திரைப்படத் துறையில் இசை மூலம் மக்களை சந்தித்துவந்த நான், அரசியலுக்கு வந்தால் தான் சின்னம்மாவும் அம்மாவும் என்னிடமிருந்து அபகரித்த சிறுதாவூர் பங்களாவை மீட்க முடியும் என்று மோடி சொன்னார். என் பெயரில் கங்கை இருப்பதாலேயே மொடிஜிக்கு என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. மக்களுக்கு நாட்டுப்புற இசையை ‘கரகாட்டக்காரன்” படத்தில் திகட்ட திகட்ட தந்த என்னை இந்த பாஜக ‘தமிழிசை’ அறிமுகம் செய்துவைத்தது மிகப் பொருத்தம்.

முன்னதாக நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்” பாட்டுப் பாடி அம்மா புகழ் பாடினார், பின்னர் சட்டசபையில் கருணாஸ் ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’ என்று பாட்டுப்பாடி அம்மாவை அப்பல்லோவுக்கு அனுப்பி ‘டெட்பாடி’ ஆக்கினார். பின்னர் அம்மா சமாதியில் சிரித்தபடி ‘செல்பி’ எடுத்து தன் சுயரூபத்தைக் காட்டினார். சினிமாவில் மட்டுமல்ல அரசியலில் பரிமளிக்கவும் இசை தேவைப்படுகிறது. ஜெயா வெச்சிருந்த ஆர்கே நகரை இப்போ யார் வெச்சுருக்கா என்று தெரியவில்லை. எனவே நான் எம்.எல்.ஏ ஆகி மோடிஜி வெளிநாடு பயணத்தை குறைத்துக் கொண்டு இந்தியாவிலேயே தங்கி நாட்டை குட்டிச்சுவராக்க சொல்லி “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?” பாட்டை பாடலாமென்று இருக்கிறேன். என்றபடி தோளில் தொங்கிய ஆர்மோனியக் கட்டையை தட்டி டியூன் போட ஆரம்பித்தார்

பகிர்

There are no comments yet