சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து, அந்த கூட்டணியில் இருந்த மூன்று கட்சிகளும் ஆலோசனை நடத்தி வந்தன. இதற்கிடையே தேர்தலில் போட்டியில்லை என்று திருமாவளவனும், தேர்தலில் போட்டியிடுவோம் என்று ஜி.ராமகிருஷ்ணனும் கூறி வந்தனர். இதற்கிடையே, நேற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் ஆலோசித்து வந்தனர்.

இந்நிலையில், திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன் நடந்த ஆலோசனையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொலை நோக்கு பார்வையுடன் தேர்தலை அணுக வேண்டும் என்பது எங்கள் கருத்து. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதில், எங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து இருந்தது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மார்க்சிஸ்ட் பின்வாங்கவில்லை.

இது குறித்து கப்ஸா நிருபரிடம் கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் கங்கை அமரன், ஒரு தலித் ஆனா நான் பொது தொகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய கட்சி பாஜக சார்பில் தைரியமாக போட்டியிடுகிறேன், அனால் தலித்துக்கெல்லம் தலைவர் என்று சொல்லிக் ‘கொல்லும்’ திருமாவளவன் போட்டியிடாமல் கோழையாக பின் வாங்குகிறார். அட் லீஸ்ட் ஒரிஜினல் தலித் எனக்காகவாவது ஆதரவு அளித்திருக்கலாம். இது அவரது முற்போக்கு புத்தியை காட்டுகிறது என்று காட்டமாக சொன்னார்.

There are no comments yet