நியூயார்க்/சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது மகன் சரண் இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் முன்னதாக சென்ற ஆண்டு ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சி நடத்தி முடித்துவிட்டார். இந்நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பாடி பணம் பண்ணிவிட்டதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீது வழக்குத் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார். “இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் வக்கீல், நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் சித்ரா, சரண், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை மேடையில் பாடக் கூடாது என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.” அவ்வாறு பாடினால் பெரும் தொகை அபராதமாக தரவேண்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராக தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி சட்டம் இருப்பது எனக்கு தெரியாது என எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளையராஜா இடையே ஏற்கனவே காப்புரிமை குறித்த பனிப்போர் இருந்துவந்ததாக சினிமாத்துறை கிசுகிசுக்கிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எதிராக கேஸ் போடவும் தயங்கமாட்டேன் என இளையராஜா எச்சரித்ததாக தெரிகிறது. உண்மை நிலவரம் தெரியவில்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது “எஸ்.பி.பி.50” என்ற தனது உலக இசைப் பயணத்தை உலகம் முழுவதும் நடத்தி வருகிறார். மற்ற நாடுகளில் நிகழ்ச்சி நடத்தியபோது ஏதும் பேசாதவர் யு.எஸ் பயணத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை. சட்டம் அது தான் என்றால் அதை நான் மதிக்கிறேன். இன்று முதல் இளையராஜாவின் இசை அமைப்பில் நான் பாடிய பாடல்களை எங்கள் குழு இசைக்காது. கடவுள் புண்ணியத்தால் நான் மற்ற இசை அமைப்பாளர்களுக்கும் பல அருமையான பாடல்களை பாடியுள்ளேன். அவற்றை வைத்து நிகழ்ச்சியை கொண்டு செல்வோம். நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் ஏமாற்றமடைய கூடாது என்பதற்காகவே இந்த பிரச்சினையை ரசிகர்கள் மத்தியில் முன்வைக்கிறேன். இளையராஜாவின் உலக இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொள்ளாததன் கடுப்பே இளையராஜா கேஸ் போட காரணம் என்று பேசப்படுகிறது. இது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பேஸ்புக் பக்கதில் கூறி இருப்பதாவது: “ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டில் மற்றும் லாஸ் ஏஞ்செலஸ் நகரங்களில் எனது நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் வக்கீல் சித்ரா, சரண், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நகரங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பு உள்ளார். ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சி நடத்தியபோது சும்மா இருந்தவர் இப்போது குதிக்கிறார். இது குறித்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். கடவுளின் விருப்பம் இதுவென்றால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன், சர்வேஜனா சுகினேபவந்து.” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்மோனியபெட்டியை துடைத்துக் கொண்டிருந்த இளையராஜா கப்சா நிருபரிடம் பேசினார்: “நான் இசை அமைத்த பாடல்களை விட அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாக உள்ளது. எஸ்.பி.பி ஒன்றும் தர்மத்திற்காக இந்த இசை பயணத்தை மேற்கொள்ளவில்லை. டிக்கெட் விலை… ச்சும்மா தகவலுக்கு தருகிறேன் VVIP $249.00 VIP $149.00 Gold $99.00 Silver $79.00 Bronze $59.00 General Admission $39.00 என்று டாலரில் பணம் பார்க்கிறார். “வேலையில்லாத மாமியா மருமகனை தொட்டியில போட்டு தாலாட்டினாளாம்” என்று ஒரு பழமொழி இருக்கிறது அதை தான் நான் செய்கிறேன். தற்போது வேலை இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து இருக்கிறேன். இது முழுக்க முழுக்க வாரிசுகளின் பிரச்சினை. எஸ் பிபியின் மகன் இந்த இஸாஈ டூரை அரேஞ் செய்து காசு பாக்குறான். இளையராஜா (என்) மகன் அதை கேஸ் போட்டு தடுக்குறான் அவ்வளவே. அரசியலில் மட்டும்தான் வாரிசுகள் அடித்துக் கொள்ளவேண்டுமா, கலைத்துறையில் கூடாத என்று அபஸ்வரத்தில் எரிந்து விழுந்தார்.

பகிர்

There are no comments yet