மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங் களை முன்வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக மேலும் பிரதமர் மோடியிடமும் ரகசிய கோரிக்கை விடுத்துள்ளோம், மோடி இரட்டை இலையை முடக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.
திராவிடத்தை அழித்த எம்ஜிஆருக்கு பின்னால், சர்வாதிகாரியாக அதிமுகவை மாபெரும் இயக்கமாக ஜெயலலிதா நடத்தி வந்தார். இலவசங்களை அளித்து தமிழர்களை ஏமாற்றி, மாநிலத்தை குட்டிச்சுவராக்கினார். இந்த ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்.
எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. அதிமுகவை உடைக்கச் சொல்லித்தான் உத்திரவு. இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு இல்லை. அது எங்களுக்குத்தான் கிடைக்கும். எங்களுக்கு இரட்டை இலை இல்லை என்றால் முடக்க வாய்ப்பு உள்ளது. எங்களுடன் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் முன்னாள் எம்எல் ஏக்கள், அதுதான் பிரச்சினை என்று கூறி தீபாவுக்கு போன் செய்ய தனது அலை பேசியை எடுத்தார்.
There are no comments yet
Or use one of these social networks