சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 17-ம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், தீபா தனித்து செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், தொண்டர்கள் விருப்பப்படி தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த அவர், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்றார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை சிஐடி காலனியில் தனது ஆதரவாளர்களுடன் மாதவன் தனியாக ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்டமாக மதுரவாயலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று கூட்டத்தை கூட்டி புதிய கட்சி குறித்த அறிவிப்பை மாதவன் வெளியிடுவதாக இருந்தார். ஆனால், அங்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவேற்காட்டில் நேற்று தனது ஆதரவாளர்களிடம் மாதவன் ஆலோசனை நடத்தினார்.
எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை’ நிர்வாகிகள் நியமனத்தில், தீபாவுக்கும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக், கார் டிரைவர் ராஜா ஆகியோர் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது, கைகலப்பு வரை சென்றுள்ளது. இதையடுத்து கணவர் மாதவனை தீபா நைய புடைத்து வீட்டை விட்டு துரத்திவிட்டதாக தெரிகிறது. தீபா வீட்டிலிருந்து, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், பணப்பெட்டியுடன் ஓட்டம் பிடித்ததாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பெட்டியில் நிர்வாகிகளிடம் வசூலித்த பணம் மற்றும் ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து ஓவர் தீபா ஆதரவாளர் நமது காப்சா நிருபரிடம் கூறும்போது: தனிக்கட்சி என்று பேட்டி கொடுத்த மாதவன் வீட்டுக்கு வந்தவுடன், தீபா அம்மா அவரை அடி அடியென்று தர்ம அடிகொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். கடந்த 17-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய மாதவன் இதுவரை வீடு திரும்பவில்லை. வெளியே ஒரு தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். கொண்டுவந்த பணம் தீர்ந்தவுடன் மீண்டும் குட்டி அம்மா தீபாவை தேடி வருவார் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks