மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மருத்துவ அறிக்கை, மார்ச் 20 அன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலமாக அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது. முன்னதாக தனுஷ் பள்ளிச் சான்றிதழ்களில் தந்தை பெயர் சாதி பெயர் குழறுபடி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மருத்துவ அறிக்கையும் சொதப்பியதால் தனுஷ் தரப்பு அப்செட்டாகி உள்ளது. மேலும், விரிவான விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏக குஷியில் இருந்த சிம்பு கப்ஸா நிருபரிடம் பல சந்தேகங்களை முன்வைத்தார்: “சினிமாக்காரன் என்ற தொழிலுக்கு தனுஷுக்கு தகுதி வந்துவிட்டது. ஒரு பள்ளியில் இருந்து கொடுக்கப்படும் சான்றிதழ்களில் அந்த மாணவனுடைய அங்க அடையாளங்கள் கட்டாயமாக குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் தனுஷ் சமர்ப்பித்த ஆவணங்களில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை என்னும்போதே சந்தேக நிழல் விழுந்தது. இப்போது மருத்துவ அறிக்கையும் அங்க அடையாளங்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது.
தனுஷின் மருத்துவ அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:
நீதிமன்ற உத்தரவுப்படி பதிவா ளர் அறையில், நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களைப் பதிவா ளர் முன்னிலையில் தனியறையில் சரிபார்த்தோம். அதன் விவரம்:
1. பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டபடி இடது கழுத்து எலும்பின் மேல் பகுதியில் மச்சம் எதுவும் இல்லை. அதேபோல, இடது முன்னங்கையில் எந்த காயத்தழும்பும் இல்லை.
2. உடலின் தோல் பகுதியில் மேற் பரப்பில் உள்ள சிறிய மச்சங்களை அகற்றிவிடலாம். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காயத் தழும்புகளை அகற்ற இயலாது. இந்த சிகிச்சை முறையில் காயத் தழும்பின் அளவைக் குறைக் கலாம்.
3. தோலின் மேல் பகுதியில் சிறிய மச்சமானது, லேசர் சிகிச்சை மூலம் அடையாளம் தெரியாத அளவில் நீக்கப்பட்டுள்ளது. பெரிய அளவி லான மச்சம் அகற்றப்பட்டிருந்தால், அதன் எச்சங்களை நுண்ணோக்கி மூலம் காண முடியும். ஒரு தழும்பை இப்போதுள்ள நவீன பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பத்தால் அகற்ற முடியாது. ஆனால், அதன் அளவைக் குறைக்கலாம் என மருத்துவ அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கையில் சிறிய மச்சம் ஒன்று லேசர் சிகிச்சையில் அழிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையில் தனுஷ் உடலில் இருந்து மச்சம் அகற்றப்பட்டதாக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.
உடலில் உள்ள அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது ஒரு மேட்டரே இல்லை. சுசி லீக்ஸில் வெளியான இவரோட பற்பல திருவிளையாடல் வீடியோக்களோடு ஒப்பிட்டுப் பாருங்க. தெளிவா இல்லேன்னா, அந்த வீடியோக்களில் இவரோடு நடித்தவர்களை விசாரித்தா சரியா சொல்லிடுவாங்க. “7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதை என் வாழ்வில் நடந்த கதையின் பாதிப்பு” என செல்வராகவன் கூறியுள்ளார்.. அந்த படத்தில் தம்பி என்ற ஒரு கேரக்ட்டரே இல்லை.. தங்கை கேரக்டர் மட்டுமே உண்டு.. அது செல்வராகனின் உன்மை கதை என்றால் ஏன் தம்பி கேரக்டர் வைக்கப்படவில்லை? தங்கள் மகன் 15 வயதில் சினிமாவில் நடிப்பதற்காக லெட்டர் எழுதிவைத்துவிட்டு சென்றுவிட்டார் என மேலூர் தம்பதிகள் கூறியுள்ளனர்.. அதே வேளையில் தன்னுடைய 17வது வயதில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ், கஸ்தூரி ராஜாவின் மகனாக அறிமுகமாகிறார்.. 15 வயதில் கஸ்தூரிராஜா கலைச்
செல்வனை(தனுஷ்) சந்தித்திருந்தால், இரண்டே வருடத்தில் யாரோ ஒரு பையனை தன் மகனாக தத்தெடுத்து அவரை ஹீரோவாக அறிமுகம் செய்வது எந்த அளவில் சாத்தியம் என்று தெரியவில்லை.
எனக்கு டி ஆர் ஒருவர் தான் அப்பா, உஷா ஒருவர் தான் அம்மா, காதலிகள் தான் நிறைய ஆனா இந்த தனுஷ் பயலுக்கு ரெண்டு அம்மா ரெண்டு அப்பா, நீ பெரிய நடிகன்டா-பெத்தவங்களையே மாத்திட்ட. ஒன்னு தெரிஞ்சுக்க பணம் இன்று வரும்-நாளை போயிரும். ஆனா நம்ம பெத்த தெய்வங்களை கையி விட்டவன் மனிதனே இல்லடா. இன்றைய உனது நடிப்பு நாளைய அழிவு. இன்னும் சில வருடங்கள் கழித்து தனுஷ் தான் எங்க அப்பான்னு நிறையபேர் வரப்போரங்குனு நினைக்குறேன். பராமரிப்பு தொகையை கொடுத்துவிட்டு வெளியே வந்திருக்கலாம். இப்போ பாருங்க ரஜினி அங்கிளுக்கு நிஜ சம்பந்தி மேலூர் கதிரேசனா என்று எல்லோரும் சந்தேகபடுறாங்க. இப்படி அவமானப்படுவதற்கு பதிலாக தனுஷ கழட்டி விட்டுடலாம் என்று விரலை ஆட்டிகாட்டி ‘உச்’ கொட்டினார்.
There are no comments yet
Or use one of these social networks