சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் இயந்திரம் ஆகியவை நிறுவப்படும் என்று அத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தண்டையார்பேட்டையில் நேற்று அவர் கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 721 வாக்காளர்கள் உள்ளனர், இவர்கள் அனைவரின் வாக்குகளும் அதிமுக வேட்பாளர் தினகரனுக்கு இருக்குமாறு எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செட் செய்யப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் மொத்தம் 50 அமைவிடங்களில் 256 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை நடத்தி வாக்காளர்களின் கவனத்தை சிதறடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த அப்பல்லோவில் அளித்த சிகிச்சையை போல், வாக்குப்பதிவை வெளிப்படையாக நடத்தும் விதமாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட உள்ளது. பின்னர் சின்னம்மா விரும்பினால் அனைத்து கேமராக்களும் ஸ்விச்ச் ஆப் செய்யப்படும். மதுசூதனன் போன்ற ரவுடி வேட்பாளர்களை சமாளிக்க துணை ராணுவப்படை உதவியும் கோர திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், விதி மீறல்கள் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணான 000000 00000-ல் புகார் தெரிவிக்க லாம். இதுவரை சிறு சிறு விதி மீறல்கள் தொடர்பாக 13 புகார்கள் வந்துள்ளன. அது குறித்து விசாரிக்க சின்னம்மாவின் அனுமதி கோரி இருக்கிறோம் என்று கூறினார்.

There are no comments yet