சென்னை/டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளிடமும் விசாரணை நடத்திய பிறகு இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். பின்னர் அவர் முதல்வராக பதவியேற்க முயன்ற போது, கட்சியில் பிளவு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என இவர்கள் தரப்பில் தேர்தல் ஆணை யத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று பன்னீர் செல்வம் தரப்பினர் மற்றொரு மனு அளித்தனர். அதேபோல, சசிகலா தரப்பிலும் இரட்டை சின்னம் கோரி மனு தரப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலை யில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது. இதுபற்றி தேர்தல் ஆணை யம் தெரிவித்திருப்பதாவது: மோடியின் கட்டளைப்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் 23-ம் தேதி (இன்று) ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக அவர்கள் சின்னத்தை பரிந்துரை செய்யலாம்.

இது குறித்து தனது வீடு முன்பு பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை கொண்டாடிய ஓபிஎஸ் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: எனது பிறவிப் பயன் இன்றுதான் அடைந்தேன். ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கிய மோடிக்கு நன்றி ‘‘இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டிருப்பது எங்கள் பேச்சை மோடி கேட்கிறார், மோடி பேச்சை நாங்கள் கேட்கிறோம் என்பதன் அடையாளம். தமிழகம் முழுக்க எனது ஆதரவாளர்கள் வெற்றி விழா கொண்டாடுவார்கள் என்று கூறினார்.

பகிர்

There are no comments yet