சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வில் சசி அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இரட்டை இலை சின்னத்தை கைபற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டிய நிலையில், இரு அணிகளுக்கும் இல்லாமல் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் அ.தி.மு.க.,வின் இரு அணியினரும் இன்று(மார்ச் 23) புதிய சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்காக காலை 10 மணியளவில் தேர்தல் ஆணையத்தை அணுகவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இரு அணியினரும் புதிய சின்னத்தை தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து ஞானம் பெற்றதால் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் சமாதியையே சின்னமாக வழங்கக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஓபிஎஸ் ஒரு தரப்பு எம்ஏல்ஏ கூறும்போது: அண்ணன் ஓபிஎஸ்சுக்கு அறிவு வந்தது அம்மா சமாதியில் உட்கார்ந்த பின்னர் தான். அதுக்கு அப்புறம் தான் சின்னம்மா, பொன்னம்மா, குட்டி அம்மா தீபா எல்லோரும் சமாதிக்கு போனார்கள். எனவே ராசியான சமாதியையே சின்னமாக வேண்டும் என்று அண்ணன் நினைக்கிறார். தினகரன் ஆட்களும் இதையே கேட்பார்கள் என்று தெரிகிறது. எனவே இரட்டை இலைக்கு ஏற்பட்ட போட்டி போல், சமாதி சின்னத்திற்கும் கடும் போட்டி நிலவும் என்பது உறுதி என்றார்.

There are no comments yet