சென்னை: பவர்பாண்டி’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் தனுஷ், தன் தாய் தந்தை, சகோதரி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியதோடு, நம் மண் இசை நமக்கு தேவை என்றார். நடிகர் தனுஷின் ‘கன்னி’ முயற்சியக இயக்கியுள்ள பவர்பாண்டி படத்தில் கதை நாயகனாக ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகில் நல்லது கெட்டது, அன்பு வெறுப்பு என்று இரண்டும் உள்ளது. இதில் நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம், எதை நோக்கி போகிறோம் என்பது, நம் கையில் தான் இருக்கு. நேர்மையான சிந்தனைகளை தேர்ந்தெடுத்தால் நிம்மதியாக இருக்கலாம் இது தான் பவர்பாண்டி. சிம்புவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் பேசப்படும் தனுஷ், சிம்புவின் ‘மன்மதன்’ போல ஒரு படம் இயக்கி காட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக யோசனையில் இருந்தார். அது இப்போது நனவாகி உள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்குனர் என்றாலும் அவரது தலையீடு அல்லது உதவி இல்லாமல் இயக்க வேண்டும் என்று தானே முழுமுயற்சியில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்காக நம் மண்ணின் இசையை தர முயற்சித்துள்ளோம். எதிர்காலத்தில் நம் மண் இசையை நமக்குத் தேவை” என்று டீசர் வெளியீட்டு விழாவில் தனுஷ் கூறினார்.

முன்னதாக எஸ்.பி.பி – இளையராஜா ராயல்டி பிரச்னை பூதாகாரமாகிக் கொண்டிருந்த வேளையில் ‘மண்ணின் இசை’ என்ற பதத்தை பயன்படுத்தியதால், இவர் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசுகிறாரா என கப்சா ரசிகர் கேள்வி எழுப்பி உள்ளார். பட டீசர் வெளியீட்டின் போது தனது அம்மா அப்பாவுக்கு நன்றி கூறிய தனுஷ், நிலுவையில் உள்ள வழக்கு குறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மதுரை மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் தம்பதியர் தொடர்ந்த வழக்கில், முதலில் பள்ளி சான்றிதழ் குழறுபடியால் சிக்கித் தவித்தார். அதன் பின்னர் கதிரேசன் தம்பதியினர் சமர்ப்பித்த சான்றிதழில் உள்ளபடி தனுஷ் உடலில் மச்சங்கள் இருக்கிறதா என்ற விசாரணையிலும், அரசு மருத்துவர்கள் அறிக்கையின் படி சில மச்சங்கள், தழும்புகள் லேசர் முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள் நடத்தும் தாய் சத்யா பள்ளியில் மாற்றுச் சான்றிதழில் SC எனப் போட்டது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் சென்னைப் பையனுக்கு மண்ணின் இசை மீது வந்துள்ள பற்றுதலால் மேலும் வலுக்கிறது என்று கப்சா நிருபர் புது பூகம்பத்தை கிளப்பினார். இதற்கெல்லாம் டி.என்.ஏ டெஸ்ட் தான் ஒரே வழி என்று நீதிமன்ற வளாகத்தில் கப்சா வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet