சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ‘என் ஆதரவு யாருக்கும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிவித்து உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தபோது பா.ஜனதாவுக்கு ஆதரவான முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது ரஜினி அமைதியாக இருந்து விட்டார். தற்போது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் குறிப்பாக தமிழிசை ஊடக பேட்டிகளில் தங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார். இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவருக்கு கலை – இலக்கியப் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியும் பா.ஜ.க வழங்கியது.
My support is for no one in the coming elections.
— Rajinikanth (@superstarrajini) March 23, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கங்கை அமரன் ரஜினியை நேரில் சந்தித்து பேசி விட்டு கட்டிபிடித்தபடி போட்டோ எடுத்துக் கொண்டு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் “எனக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவர் பா.ஜனதாவில் சேருவாரா? என்று கேட்கிறீர்கள். நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்” என்று பூடகமாக பேட்டியளித்தார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “ரஜினிகாந்த் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் தேசிய சிந்தனை கொண்டவர். நல்லவர் நல்லவர்களோடு சேருவார்” என்றார்.
இதனால் ரஜினி ரசிகர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட தயாரானார்கள். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். “ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை” என்று அவர் அதில் கூறி இருக்கிறார். தொடர்ந்த்து, 2.0 படத்தை தயாரிக்கும் இலைங்கையை மையமாக கொண்ட லைகா நிறுவனம் இலங்கையில் ஏழைகளுக்கு கட்டிய வீடுகளை வழங்கும் திட்டத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். பாஜகவிடம் இருந்து தப்பவே இலங்கை சென்று விட்டதாக சிலர் கிசுகிசுத்தனர். நமது கப்சா நிருபரின் புலனாய்வில் சமீபத்தில் அமெரிக்காவில் கலைநிகழ்ச்சி நடத்தவிருந்த எஸ்.பி.பி யிடம் இளையராஜா ‘ராயல்டி’ கேட்டு நோட்டிஸ் அனுப்பியது போல் ஆர்கே நகர் தேர்தலில் ‘வாய்ஸ்’ கொடுக்க சில லேக்ஸ் ராயல்டி கேட்டதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ந்த பாஜக வேட்பாளர் கங்கை அமரன் கப்சிப் ஆகி விட்டதாகவும், கர்நாடகாவில் பண்ணை வீடு வாங்கியது போல் இலங்கை நிலம் வாங்க இடம் பார்க்கவே ரஜினி லைகா நிறுவன வீடு வழங்கும் விழாவிற்கு சென்றுள்ளதாக கப்சா நிருபர் தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks