சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது கணவில் வந்து பேசியதாக எம்ஜிஆரால் படிக்க வைக்கப்பட்ட, ஜெயலலிதாவால் மரியாதையாக நடத்தப்பட்ட எம்ஜிஆர் நம்பி என்பவர் கூறியுள்ளார் ‘அனைத்து இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் எம்ஜிஆர் நம்பி. அப்போது பேசிய அவர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது ஜெயலலிதா போன்ற மெழுகு பொம்மை தான் என புது குண்டைப் போட்டார். மேலும் ஜெயலலிதாவின் ஆன்மா தனது கனவில் வந்து பேசியய அவர் ‘நான் எப்படி இறந்தேன் என்று எனக்கே தெரியவிலலை. நான் உயிரோடு இருக்கும்போது தான் தொந்தரவு செய்தார்கள் என்றால், நான் இறந்த பிறகும் என்னை நிம்மதியாக விடமாட்டேன் என்கிறார்கள். என்னை அறைகிறார்கள். என் சமாதிக்கு வருபவர்கள் நாசமாத்தான் போவார்கள்.

என் சமாதிக்கு சென்ற பன்னீர்செல்வம் பதவி இழந்தார். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். தீபா கருத்து வேறுபடு காரணமாக கணவனை விட்டு பிரிந்தார். பேரவை கலைக்கப்பட்டது. சமாதிக்கு சென்ற தீபா கணவன் காணாமல் போனார். சமாதிக்கு சென்ற தினகரன் இரட்டை இலை சின்னம் இழந்தார். என் சமாதி சென்று பட்ஜெட் சூடகேஸ வைத்த ஜெயக்குமாரும் அவருடைய பட்ஜெட்டும் நாசமாகப் போகும். இரட்டை இலைச்சின்னம் நிரந்தரமாக முடங்கும். தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியே இருக்காது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கும் வேளையில் கட்சி காணாமல் போவது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்?’ என்று அம்மாவின் ஆன்மா சொன்னதாக தெரிவித்தார்.

பெங்களூரு சிறையில் ஆழ்நிலை தியானத்தில் டெலிபதியில் இதை உணர்ந்த சின்னம்மா ஜெயலலிதா நினைவிடட்த்துடன் சேர்த்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தையும் இடித்து தள்ள தினகரன் திவாகரனை பணித்ததாக கப்சா நிருபர் தெரிவித்தார். ஆர்கே நகர் தேர்தலில் பிசியாக இருப்பதால், அது முடிந்தவுடன், அம்மா மெரினாவில் உள்ள சீரணி அரங்கத்தை இரவோடு இரவாக தரைமட்டம் ஆக்கியதுபோல், எம்.ஜி.ஆர். நினைவிடத்தை தரைமட்டமாக்க சின்னம்மாவின் உத்தரவு ரவுடி தொண்டர்களுக்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குடிசை, ஆட்டோ எரித்த போலீசாருக்கு, இப்பணியில் முன்னுரமையும் கூடுதல் பேட்டாவும் தரப்படும் என தெரிகிறது.

There are no comments yet