சென்னை: நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஓ.பி.எஸ் அணியின் சார்பில் மது சூதனன், இரட்டை மின் கம்ப சின்னத்திலும், தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. திமுக சார்பில் மருதுகணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், பலர் அங்கு போட்டியிட்டாலும், போட்டி என்னவோ இந்த 4 பேருக்குதான்.

அதேபோல், பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் குறைந்த அளவிலான வாக்குகளை பெறுவார் என்பதும், டெபாசிட் பெறுவதே கஷ்டம் என்பது தெரிந்தும் பாஜக அவரை நிறுத்தவது சம்பிராதயத்துக்குதான். இந்நிலையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது பாஜகவிற்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக ஏற்கனவே தமிழிசை சவுந்தரரானும், ஹெச். ராஜாவும் அதை வரவேற்று கருத்து தெரிவித்தனர்.  தற்போது தினகரனுக்கு அவருக்கு இரட்டை இலை சின்னமும் கிடைக்கவில்லை. எனவே, பல வருடங்களாக அந்த சின்னத்திற்கு தொடர்ந்து கிடைக்கும் ஒட்டுகள் தனக்கு கிடைக்காது என்பதை உணர்ந்துள்ள தினகரன் தரப்பு எப்படியும், பணத்தை இறைத்து தொப்பி சின்னத்தில் வெற்றி பெற முயற்சி செய்யும் என்பதை பாஜக தரப்பு உணர்ந்துள்ளது.

இந்நிலையில், பணப்பட்டுவாடாவுக்கு ஏதுவாக ர்கே நகர் தேர்தலுக்காக 5000, 10000 ருபாய் நோட்டுகள் அச்சடிக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சின்னம்மா பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்தது, நமது கப்ஸா நிருபரிடம் புதிய 5000, 10000 நோட்டுகளுக்கான தேவையை ஆர்கே நகரில் எதிர்கொள்ளும் வகையில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் இயங்கி வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சார்பில், அதன் தலைவர் கரன்சி கப்சிப் சிங் கூறியதாவது: ஆர்கே நகரில் கட்சிகளின் பணத்தேவையை சமாளிக்க அனைத்து ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் தேவைகளைச் சமாளிப்பதற்காக, புதிய 5000, 10000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் உத்திரவுப்படி இந்த தேர்தலை சுமுகமாகவும் இடையூறு இல்லாத வகையிலும் நடத்த ஏற்கும் வகையில் வாக்குச்சாவடி அருகில் ஒவ்வொரு கட்சியின் பணப்பட்டுவாடா செய்ய வசதியாக நடமாடும் ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

டிஜிட்டல் இந்தியா கொள்கைப்படி, காட்சிகள் வாக்காளர்களுக்கு ஆன்லைனில் பணத்தை நேரடியாக டிரான்ஸ்பர் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளால், பணத்தை நேரடியாகக் கையாளுவது குறைந்து தேர்தல் கமிஷனின் பறக்கும் படைக்கு வேலை குறையும் என்று கூறினார்.

There are no comments yet