சென்னை: இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஏற்கனவே விஜய் நடிப்பில் ‘கத்தி’ என்ற படம் எடுத்த நிருவனம் ‘லைகா’ என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர். இதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி, எனது நண்பர் திருமாவளவன் தன்னிடம் இலங்கை செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தியதாலும், வைகோ நேரிடையாகவே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாலும், வேல்முருகன் தனது நண்பர் மூலம் தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்ததாகவும் இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன். எனது பயணத்தை இலங்கையில் புனிதப்போர் செய்த மக்களை காணும் நோக்கத்தில் செல்ல இருந்தேன். அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கும் எனது மீனவ சகோதரர்களுடைய உயிர்ப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனவுடன் பேச இருந்ததாவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி கப்ஸா நிருபரிடம் பேசும்போது. “திருமாவளவன் ராஜபக்சேவை சந்தித்து என்ன பரிசு வாங்கினார் என்று கேட்டால் உண்மையான காரணம் தெரிந்துவிடும். தமிழர்கள் கொல்லப்படும்போது மட்டும் இலங்கை சென்று நாடகம் நடத்தும் உரிமை திருமா, வைகோ, வேல்முருகன் போன்றவர்களுக்கு மட்டுமே உண்டு. நான் இலங்கை செல்ல எதிர்ப்பு வலுத்ததால், ஷங்கர் தயாரிப்பில் எந்திரன் 2.0 படம் பாதிக்கப் படாமல் இருக்க பயணத்தை ரத்து செய்தேனே தவிர திருமா போன்ற குருமாக்களுக்கும் வைகோ போன்ற சைக்கோ களுக்கும் பயந்தல்ல. இப்படித்தான் என் பட ரிலீஸ் நேரம் வந்தாலே ஒரு ‘படபடப்பு’ வந்துவிடும் என்று ‘அதிருதில்ல’ ஸ்டைலில் கைகளை படபடக்க வைத்து நடித்துக் காட்டினார்.

பகிர்

There are no comments yet