சென்னை: நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா காக்க காக்க, சிங்கம் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த வீடியோவில் சூர்யா இஸ்லாமியர்களின் மசூதிக்கு வருகிறார். அங்கு அவருக்கு குல்லாய் வைத்து சில மரியாதைகள் செய்யப்படுகிறது. பின்னர் சூர்யா தொழுகை நடத்துகிறார். சிங்கம் திரைப்பட படப்பிடிப்புக்காக நடிகர் சூர்யா ஆந்திராவில் இருந்தபோது, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த அழைப்பில் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு சென்றுள்ளார். அங்குதான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூர்யாவின் தந்தை தீவிர இந்துத்வ கருத்துக்களையும், ராமாயணத்தையும் மேடைகளில் முழங்கி வருகிறார், அவரது மகனோ இப்படி தர்கா தர்காவாக சுற்றி வருகிறார் என ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து கப்சா நிருபர் செய்த டுபாக்கூர் புலனாய்வில் இது இஸ்லாம் மதத்திற்கு மாறி ஏ.ஆர்.ரகுமான் போல் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வாங்க சூர்யாவின் குடும்ப ஜோசியர் சொன்ன ஐடியா என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஜோதிகா அப்செட்டாகி உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே ராயல்டி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா யாரோ ஒரு ஜோசியர் பேச்சைக் கேட்டு ஆஸ்கர் கனவில் இரண்டு மனைவிகளை துரத்திவிட்டு மூன்றாவதாக ஒரு இஸ்லாமிய பெண்னை மணமுடித்து மதம் மாறினார். ஆனால் அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்றவர்கள் போலக் கூட பிரபலமாக முடியவில்லை.

பல ஆண்டுகளாக ஆங்கிலப்படங்களை காப்பி அடித்து படமெடுத்து அதையே ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி பல முறை தோல்வியை தழுவிய போலி ஆஸ்கர் நாயகன் கமல்ஹாசன், சூர்யாவின் இந்த முடிவிற்கு வரவேற்பு தெரிவித்து தானும் மதம் மாற சம்’மதம்’ தெரிவித்துள்ளதாக கோடம்பாக்கம் பட்சி கூறுகிறது.

பகிர்

There are no comments yet