சென்னை: ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முக்கிய வேட்பாளர்களான திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன், சிபிஎம் சார்பில் போட்டியிடும் லோகநாதன் ஆகியோர் சுட்டெரிக்கும் வெயிலிலும் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது தோல்வி வேட்பாளர் மது சூது நிந்தனை ஆதரித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து என்னிடம் யாரும் விளக்கியது இல்லை, ஜெயலலிதா மட்டுமே ஆவியாக வந்து விளக்கி சொன்னார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று அவரே வந்து சொன்னால் ஒழிய என் அதர்மயுத்தம் ஓயாது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த உத்தரவிடப்படும். அனால் ஜெயலலிதா மீண்டும் உயிர்த்து எழுந்தால் கூட என்னால் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக முடியாது.

நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து டிடிவி தினகரன், மக்களை ஏமாற்ற பார்க்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் முதல்வர் பழனிசாமி மாற்றப்படுவார். அப்போது, முதல்வர் பழனிசாமி எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம். அப்போது இரண்டு முன்னாள் முதல்வர்கள் கொண்ட கட்சி என்று எனது அணிக்கு பெயர் கிடைக்கும். முன்னாள்கள் அணி என பெயர் மாற்றம் செய்வோம்.

நாங்கள் ஆர்கே நகரில் வெற்றிபெற்றால், கருணாநிதியிடமிருந்து கச்சதீவை மீட்போம், பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைதாகியுள்ள சேகர் ரெட்டி உதவியுடன் எவ்வளவு செலவானாலும் எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், அம்மா ஆவியுடன் இப்போது எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பகிர்

There are no comments yet