சென்னை: சமீப காலமாக ஆதார் அட்டையைச் சுற்றி எக்கச்சக்க களேபரங்கள் நடந்து வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஒவ்வொன்றிற்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு. மறுபக்கம் உச்சநீதிமன்றமோ அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் கார்டு அவசியம் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் மத்திய அரசு கேட்பதாக இல்லை.
இந்நிலையில், வி.வி.ஐ.பிகளின் ஆதார் கார்டு விவரங்கள் வரிசையாக லீக்காகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியாகி வைரலானது. அதற்கு தோனி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே ஆதார் பாதுகாப்பில்லை எனக் கூறி வந்தவர்களின் குரல் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேலும் வலுப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று ஆர்கே நகரில் தனது வேட்பாளர் மது சூதனனை ஆதரித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: ஜெயலலிதா மரணத்தை அரசிலயாக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். அப்போதைய முதல்வராக இருந்த நான் ஜெயலலிதாவை காப்பாற்ற முயற்சி செய்யாமல் சின்னம்மா காலில் விழுந்து கிடந்து பதவியையே அனுபவித்தேன். பதவி இல்லை என்றவுடன் எனக்கு அறிவு வந்து மெரினாவில் போய் உட்கார்ந்து மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றேன். அப்போது தான் அம்மாவின் ஆன்மாவையும் சந்தித்தேன். நாட்டில் ஆதார் இல்லாமல் மக்கள் எதுவுமே செய்யமுடியவில்லை. எனவே எனக்கு தேவைப்பட்டால் வந்து உதவும் அம்மாவின் ஆன்மாவுக்கும் ஆதார் கார்டு வழங்க பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும். இதற்காக அம்மாவின் ஆன்மா குறித்த அனைத்து விபரங்களையும் வழங்க தயாராக உள்ளேன் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks