சென்னை: கருணாநிதி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் (ஐந்து மாமாங்கம்) நிறைவு அடைந்ததை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தொண்டனுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 60ம் ஆண்டு நிறைவு அதாவது சட்டமன்றத்திற்கு சனியன் பிடித்து 60 ஆண்டுகள் பெறுகிற தருணம் இது. சட்டமன்றத் தேர்தல் களத்தில் அபசகுனம் பிடித்த எண்ணான 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் திமுகவையும், உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு அஸ்தமன களம் கண்டு வெற்றிகளைக் குவித்தவர்.

இந்தப் பெருமை இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது. குளித்தலையில் களம் கண்ட முதல் தேர்தலிலேயே வென்ற தலைவர் கருணாநிதி 1957 ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினத்தில் சட்டமன்றத்தில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். அதன் 60ம் ஆண்டு நிறைவு விழாதான் இன்று. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர், 1989, 1991 தேர்தல் களங்களில் துறைமுகம், 1996, 2001, 2006 என 3 முறை சேப்பாக்கம், 2011ல் தன்னை வளர்த்தெடுத்த திருவாரூர், 2016ல் மீண்டும் அதே திருவாரூர் தொகுதியில் தமிழகத்திலேயே கள்ள ஓட்டுக்கள் மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையுடன், இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றி பெற்ற சாதனையாளர். அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராக கருணாநிதி இருந்தபோதுதான், இந்தியாவில் முதன்முதறையாக தமிழகத்தில் பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அண்ணாவின் மறைவுக்குப் எம்.ஜி.ஆருக்கு கல்தா கொடுத்துவிட்டு கட்சியுயைம் ஆட்சியையும் அவரது தோளில் துண்டாக்கிக் கொண்டு, தமிழ்நாட்டை துண்டு போட்டவர்.

குடிசைமாற்று வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கைரிக்‌ஷா ஒழிப்பு, கண்ணொளித்திட்டம், தொழுநோய் மறுவாழ்வு இல்லம் என பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்கு தெரியாத்தனமாக வாய்த்த காலங்களில் மனைவிகளையும் மகளையும் கருத்தில் கொண்டு பெண்களுக்கான சொத்துரிமை, குட்டிச்சுவர்க்ளாகிப் போன சமத்துவபுரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகி சில்லறைக்கு கையேந்தும் சட்டம், 69 சதவீத இடஒதுக்கீடு, சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ புழுபுழுத்த அரிசி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத் தொழிற்கல்வி, நுழைவுத்தேர்வு ரத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமைச்சரவை, திருநங்கைகளுக்குத் தனி வாரியம், பேருந்துகளில் திருக்குறளை எழுதி பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் ஐந்து மதிப்பெண்கள், விவசாயிகளின் பயிர்க் கடன் முழுவதும் தள்ளுபடி என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் நிலைநாட்டும் திட்டங்களை செயல்படுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் களவு போனது குறித்தும், அறங்காவல் அதிகாரி சுப்ரமணியம் மர்ம மரணம் குறித்தும் கேள்வி மட்டுமே எழுப்பியதுடன், மருத்துவர்கள் வாக்கிங் போக சொன்னதால் நீதி கேட்டு நெடும் பயணமும் அதையை நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகமாக போட்டு காசு பார்த்ததும், அதன்பின நடந்த திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் கடைசி சுற்று வரை திமுக முன்னேறியது. ஆனால், சொற்ப வாக்குகளில் ஆளும் தரப்பின் வெற்றி அறிவிப்பு வெளியாகி திமுக மண்ணைக் கவ்வியது.

உடல்நலக்குறைவால் ட்ரக்கியஸ்டமி சிகிச்சைக்குப்பிறகு, அவர் இப்போது சட்டமன்ற நிகழ்வுகளில் முன்பு போல பங்கேற்க முடியாமல் ‘படுத்த’ படுக்கையாக இருந்தாலும், 60 ஆண்டுகால சனீஸ்வரன் ஆட்டிபடைத்த சட்டமன்ற வரலாற்றில் அவர் செயல்பட்ட விதமும் தனித்துவமும், தத்துபித்துவங்களும், பேராற்றலும், தொணதொணப்பும், நையாண்டியும், சட்டப் பேரவையில் பலம் மிக்க எதிர்க்கட்சியாக விளங்கும் திமுக உறுப்பினர்களுக்கு இன்றைக்கும் வழிகாட்டுகிறது. விரைந்து நலன்பெற்று மீண்டும் அவர் குரல் அங்கே ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது. கருணாநிதி வரமுடியாவிட்டால் டப்பிங் கலைஞர்களை பேச அழைக்க இருக்கிறோம். பெருமைமிக்க தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் திமுக தலைவர் கருணாநிதியின் பணிகள் என்றென்றும் வைரம் போல மிளிரும் ஒளிரும். என்றவாறு கருணாநிதியை பார்க்க வரும் தொண்டர்கள் வைரமோதிரம் கொண்டுவரவேண்டும் என சூககமா மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

பகிர்

There are no comments yet