திருச்சி: திமுக ராஜ்யசபா எம்.பி.யான திருச்சி சிவா, திராவிடர் இயக்க கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஜாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து மேடைகளில் பேசுகிறவர். அண்மைக்காலமாக திருச்சி சிவாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வலம் வருகின்றன. அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த சம்பவமும் நடந்தேறியது. ஆனாலும் திருச்சி சிவா கொள்கைபிடிப்புள்ளவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையையும் திமுக மேலிடம் மேற்கொள்ளவில்லை.

திருச்சியில் சூர்யா சிவா நேற்று அளித்த பேட்டி: 2013-ம் ஆண்டு நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். இதை உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டபோதும் தந்தை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.தற்போது என் மனைவி கர்ப்பமாக உள்ளார். ஆனால் என் தந்தை ஜாதிவெறியோடு என்னையும் மனைவியையும் பிரிக்க வேண்டும் என துடிக்கிறார். இதனால் மனைவி பிரதியூஷாவுக்கு மர்ம நபர்கள் மூலம் போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. மேலும் என்னை சசிகலா புஷ்பாவை சின்னம்மா என்று கூப்பிட சொல்லி கொடுமைப் படுத்துகிறார். நான் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை தான் சின்னம்மா என்று கூப்பிடுவேனே தவிர வேறு யாரையும் சின்னம்மா என்று கூப்பிட மாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டேன். என் அப்பா சிவா மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

There are no comments yet