சென்னை: பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல். தண்ணீர் போல பணத்தை வாரி அரசியல் கட்சிகள் இறைத்து வருகின்றன. தண்டையார்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த ஓடும் நடத்துனரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 லட்சம் ரூபாய்க்கு இருந்ததாகக் கூறி, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பணம் விநியோகம் நடைபெற்றதாகக் கூறப்படும் பேருந்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்துநர் கோவிந்தராஜ் என்பவர் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று ஆர். கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதால் அங்கு மக்களிடையே ‘மகிழ்ச்சி’ நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 8 காவல் உயர் அதிகாரிகள், 14 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 22 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று உத்தரவிட்டுள்ளார். பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தினகரன் கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: மாநகரப் பேருந்தில் வெற்றிகரமாக பணப் பட்டுவாடா செய்துவிட்டோம், அதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் கண்ணில் மண்ணை தூவி ஷேர் ஆட்டோ கால் டாக்சிகளில் பணம் பட்டுவாடா செய்ய எனக்கு ஈமெயில் மூலம் சின்னம்மா யோசனை சொன்னார்கள், கண்டைனர்களை மறந்த நம் மக்கள் கண்டக்டரை மறக்க எவ்வளவு நாள் ஆகும்? அரசாங்கம், கோர்ட், போலீஸ் இருந்தும் தமிழ்நாடு உருப்படாது.

மக்கள் திருந்தாதவரை பலகோடி கொள்ளை அடிக்க நாங்கள் மக்களுக்கு 2000 கொடுப்போம் அதை வாங்கிட்டு எங்களுக்கு ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்குறாங்க.. அப்புறம் 5 வ்ருஷத்துக்கு எங்களுக்கு நீங்க அடிமையா இருக்க வேண்டியதுதான். தளபதி ஸ்டாலின் சட்டைக் கிழிப்புக்கு பிறகு சட்டமன்ற காவலர்களின் பெயரை குறிப்பெடுத்தது போல், ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவுக்கு இடைஞ்சலாக இருந்த காவல் துறை அதிகாரிகளை எங்கள் கூவத்தூர் டீம் தான் கணக்கெடுத்து கொடுத்தது. அவர்களை ராஜேஷ் லக்கானியிடம் சொல்லி இடமாற்றம் செய்தோம். அவருக்கு ‘கோடி’ புண்ணியம்.” என்றார்

பகிர்

There are no comments yet