சென்னை: பெற்றோர் மறைவுக்கு பின் கமல்ஹாசனை எடுத்து வளர்த்த மூத்த அண்ணன் சந்திரஹாசன் சமீபத்தில் அமெரிக்காவில் காலமானார். அதற்கான இரங்கல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் கமல்ஹாசனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்து திரளாக வந்த திரையுலகினர் கமல்ஹாசனுக்கு ஆறுதலாக பேசிவிட்டு சென்றனர். அண்ணன் இறந்த துக்கத்தில் தனது ஈ.சி.ஆர் வீட்டில் தூக்கத்தில் இருந்த கமல்ஹாசன் வீட்டில் ஏப்ரல் 7 நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த கமல்ஹாசன், விபத்தில் இருந்து பத்திரமாக வெளியேறியிருக்கிறார். நள்ளிரவு 11.30 மணிக்கு கமல்ஹாசனின் வீட்டில் மின்கசிவு அல்லது உயர்மின் அழுத்தம் காரணமாக அவரது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்கிறது. இதை அறிந்த பணி ஆட்கள் நடிகர் கமல்ஹாசன் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்று விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். கீழே கிளம்பிய புகை அத்தனை அறைகளுக்கும் பரவி இருந்திருக்கிறது. எனவே, தரைத்தளம் வழியாக வெளியேற வேண்டாம் எனவும், மேல்மாடிக்குச் செல்லுமாறும், நடிகர் கமல்ஹாசனிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். மூன்றாவது மாடிக்குச் சென்ற கமல்ஹாசன், அங்கிருந்து ஏணி உதவியுடன் கீழே இறங்கி இருக்கிறார். மூன்று தளங்களும் புகையால் சூழ்ந்திருந்த காரணத்தினால், புகையைச் சுவாசித்துச் சிரமப்பட்டிருக்கிறார் கமல். பிறகு விபத்தின் தன்மையை தனது உதவியாளர்களிடம் கேட்டறிந்த கமல், சிறிது நேர ஓய்விற்குப் பிறகு தனது காரில் கிளம்பி, ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வந்தடைந்திருக்கிறார்.

இந்த விபத்தின் தன்மை குறித்து, ‘என் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். நுரையீரல் முழுக்க புகையுடன் மூன்றாவது மாடியில் இருந்து இறங்கினேன். இப்போது நலமாக இருக்கிறேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனக்கு உதவிய என் உதவியாளர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களிம் அன்புக்கும் நன்றி!’ என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். பின்னர் ஆழ்வார்பேட்டையில் கப்சா செய்தியாளர்களிடம் அவர் விளக்கமளித்தார்: “என் அண்ணன் மறைவிற்கு பிறகு சொத்து பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. எனக்கு சட்டப்படி இரண்டு மனைவிகள் ஒரு பக்கம் இஷ்டப்படி நான் லிவிங் டு கெதரில் வாழ்ந்த கவுதமி மறு பக்கம் சொத்தில் பங்கு கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். என் வீட்டின் கதவு பெண்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். ஆனால் என் பணப்பெட்டியும் வங்கி லாக்கரும் எனக்கு மட்டும் தான் திறந்திருக்கும். அதனால் என் முன்னாள் மனைவிகள் இந்நாள் லிவிங் டு கெதர் கவுதமி எழுதிய காதல் கடிதங்கள், ஆவணங்களை தீ வைத்து எரித்து, சொத்தை காப்பாற்ற விபத்து நாடகம் ஆடினேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet