சென்னை/புது டெல்லி: இந்த ஆண்டு ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என பலரும் கூறி வந்தனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ரஜினி, ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மாநில அரசின் விருதை பல முறை பெற்றுள்ளார். நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர் என்ற மத்திய அரசின் விருதினை 2014-ம் ஆண்டு பெற்றார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெறவில்லை. அந்த ஏக்கம் தனக்கு இருப்பதாக ரஜினியே தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. ரஜினி தனது நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியிருந்தார். எனவே இந்தப் படத்துக்காக சிறந்த நடிகர் விருதினை ரஜினிக்கு வழங்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இந்த ஆண்டும் விருது வழங்கப்படவில்லை. மோடியின் நெருங்கிய நண்பராக இருந்தும் ரஜினிக்கு விருது வழங்கப்படத்தாது அரசியல், சினிமா நோக்கர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக மோடியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன. கபாலி திரைப்படத்தில், தலித் சமுதாயத்தினருக்கு ஆதரவாக, வசனங்கள் இடம் பெற்றுஉள்ளன. இதனால் ரஜினியை சில ஆர்எஸ்எஸ் சக்திகளை விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் ரஜினிக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தலித் காவலர் சிறு த் தை திருமாவளவன் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: ரசிகர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, கபாலி படத்தில், தலித் சமுதாய மக்களுக்கு ஆதரவாக சில காட்சிகள் இடம் பெற்று உள்ளன. அதாவது படத்தில், ‘ஆண்ட ஜாதியா’ என்ற கேள்வி எழுப்பப்படும் போது, ‘ஆளப்போகும் ஜாதி’ என்ற பதில் வசனம் இடம் பெறுகிறது. இது, தலித் சமுதாய மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் முழுக்க, ஆறு இடங்களில், தலித் இன முன்னோடியான அம்பேத்கர் பெயரை, ரஜினி குறிப்பிடுகிறார். படத்தின் இயக்குனர் ரஞ்சித், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கபாலி படத்தை திறம்பட இயக்கி முடித்ததற்காக, அவரை புகழ்ந்து தள்ளியுள்ள ரஜினி, அவரை அழைத்து முத்தமிட்டு வாழ்த்தி உள்ளார். இதனால், இந்த நேரத்தில், தலித்துகளை முன்னிலைப்படுத்தி, ரஜினி ரஜினி கபாலியில் நடித்துள்ளதால் தான் அவருக்கும், தலித் இயக்குனருக்கும் தேசிய விருது மறுக்கப்பட்டுள்ளது. இது ஆர்எஸ்எஸ், மோடி கும்பலின் எங்கள் சாதிக்கு எதிரான சதி. இதை எதிர்த்து என் கட்சி சார்பில் பஸ் எரிப்பு, பொதுமக்கள் மண்டை உடைப்பு போராட்டங்கள் நடத்த இருக்கிறோம் என்று ஆவேசமாக கூறினார்.

There are no comments yet