சென்னை/புது டெல்லி: ஆர்.கே.நகரில் ஏப்., 12ம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். தேர்தலுக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியதாவது: அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில் தமிழக பாஜக செயல் தலைவராக முன்னாள் அதிமுக தலைவர் ஓ.பன்னீர் செல்வத்தை நியமிக்க இருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக பொறுப்பாளரான அமித் ஷாவின் நெருங்கிய மத்திய அமைச்சர் நிருபருடன் ஸ்கைப் சாட்டில் பேசும்போது: பன்னீர் செல்வம் சார்பில் போட்டியிடும் மது சூதனன் தோல்வி அடைவார் என்று தெரிந்ததால், விஜயபாஸ்கர் வீட்டிலும், சரத்குமார் வீட்டுலயும் ரெய்டு விட்டு, போலி ஆவணங்களை பத்திரிகைகளில் கசிய விட்டோம். இனிமேல் யாரும் எங்களை சந்தேகப்பட மாட்டார்கள். இந்த களேபரங்கள் முடிந்த பின்னர் தமிழ் இம்சைக்கு உதவியாக ஓபிஎஸ்சை தமிழக பாஜக செயல் தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு பின்னர் மது சூதனனை பாஜக சார்பில் நிற்க வைப்போம். அப்போது குறைந்த பட்சம் டெபாசிட் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று ‘உண்மையை’ போட்டுடைத்தார்.

There are no comments yet