சென்னை: அரசியல் கட்சிகளின் வரைமுறையற்ற பணப்பட்டுவாடா நிரூபிக்கப்பட்டதால் இந்திய தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை திடீரென்று ரத்து செய்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அ.தி.மு.க. அம்மா அணியின் தினகரனின் பண விநியோகத்தை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகமும், பண விநியோகமும், பரிசுப் பொருட்களும் தொடரும் என்ற நிலை இந்த ஆட்சி நீடிக்கும் வரை சீராகப் போவதில்லை. வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள “வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில்” இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொண்டு, இனி எந்தக் காலத்திலும் தமிழக இடைத்தேர்தலில் மட்டுமல்ல பொதுத் தேர்தல்களிலும் தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் விபரமறிய அறிவாலயத்தில் தனது கிழிந்த சட்டடைகளை ஒட்டுத் துணி வைத்து கோணி ஊசியால் தைத்துக் கொண்டிருந்த செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்த நமது கப்ஸா நிருபரிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்கள் என்றாலே அனைத்து வகை முறைகேடுகளையும் செய்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் “அறிவியல் ரீதியான” நடைமுறைகளை கடைப்பிடித்து எல்லை கடந்த அதிகார துஷ்பிரயோகத்தை செய்வதுதான் திமுகவின் பிரத்யேக பார்முலா எனப்படும் திருமங்கலம் பார்முலா. கடந்த 2009-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்த விஷயம் ”திருமங்கலம் பார்முலா” என்று பிரபலமாகிவிட்டது. இது அழகிரியால் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. தமிழகத்தில் அனைவரும் அறிந்த ஒன்று. மாட்டிக் கொள்ளாமல் பணம் கொடுப்பதில் அண்ணன் அழகிரி கைதேர்ந்தவர். மறுபடி ஆர் கே நகர் அறிவிப்பு வர சில மாதங்கள் கூட ஆகலாம், அதனால் தினகரன் மதுரை சென்று அண்ணன் அழகிரியை சந்தித்து, வெட்டுக் குத்து, கட்டப்பஞ்சாயத்து, மற்றும் மாட்டிக் கொள்ளாமல் பணம் கொடுக்கும் “திருமங்கலம் பார்முலா” ஆகியவற்றில் பயிற்சி எடுக்க வேண்டுகிறேன். இதெற்கெல்லாம் முன்னோடி எங்கள் தானைத்தலைவர் கலைஞர்தான், அனால் ஆவர் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதால் அண்ணன் அழகிரி தினகரனுக்கு உதவி செய்வார் என நம்புகிறேன் என்றார்.

பகிர்

There are no comments yet