புது டெல்லி: கடந்த 28 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள், தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம், அங்கப்பிரதட்சணம், பாதி மொட்டை, பாதி மீசை, பிச்சை எடுப்பது, முழு மொட்டை, பாடைகட்டி பிணம் போல் படுத்து ஊர்வலம், மண்சோறு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 29வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைசி கந்தாயமாக மோடியை சந்திக்க அவரது அலுவலகம் வரை சென்றவர்களை காவல் துறையினர் ஏமாற்றியதால், வெகுண்டெழுந்தனர், கூச்சலிட்டபடி ஆடைகளைக் களைந்து, நிர்வாணமாகினர். தெருவில் அங்குமிங்கும் ஓடியும் தரையில் படுத்து உருண்டும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் காவல்துறையினரும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மீடியாக்காரர்கள் புகைப்படமெடுத்தும், வீடியோ எடுத்தும் தங்கள் கடமையை செவ்வனே செய்தனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா திங்கட்கிழமை மாலை நேரில் வந்து ஆதரவளித்துள்ளார். அப்போது அவர், விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ‘இப்புடி போராடுனாத்தான் இந்தம்மா வருமா? 28 நாளா தூங்கிட்டு இருந்திங்களா… அரசியல் லாபம் தேட வந்துவிட்டார்கள்…’ என்று கிசுகிசுத்தார். கோபமடைந்த நக்மா இதற்கு பதிலளித்து நமது தில்லி கப்ஸா நிருபரிடம் பேசிய போது: “உத்திர பிரதேசத்தில் முதல்வரே கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார். இவர்கள் ஏன் முதல்வர் அலுவலகம் முன்பு ஐட்டம் டான்ஸ் ஆடி போராடக் கூடாது? காங்கிரஸ் ராகுல் பாத்தாச்சு.. இப்போ நக்மாவாகிய நான், மோடி எங்க காணோம்? எங்கள் கூட்டணி தலைவர் ஸ்டாலின் கூட சட்டசபையில் சட்டையை கிழித்து கொண்டு அரை நிர்வாண நடனம் ஆடினார்.. ஆனா காங்கிரஸ் கெட்ட கட்சினு சொல்லுவாங்க.. சினிமாக்காரர்கள் அரசியல் தமிழ்நாட்டின் கேடு. கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினால் நிர்வாண நடனம் தவிர வேறு ஒன்றும் எதிர்பார்க்க முடியாது! நாங்கள் தான் பணத்துக்காக ஆடைக் குறைப்பு செய்து சினிமாவில் டூ பீசிலும் சமயத்தில் கர்சீப் கட்டியும் ஆடுகிறோம், அதே போல் விவசாயிகள் தாங்கள் கடனை தள்ளுபடி செய்யச்சொல்லி காசுக்காக நிர்வாண போராட்டம். எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை” என்றார் ‘காட்ட’மாக.
There are no comments yet
Or use one of these social networks