சென்னை: தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பவர் பாண்டி’. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜராஜன் வெளியிடவுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களை பிள்ளைகள், உறவினர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிடாமல் தங்களுக்கு என பணம் சேமிக்க வேண்டும் என்ற கருத்தை பவர் பாண்டி படத்தில் முன்வைத்துள்ளார் தனுஷ்.

‘பவர் பாண்டி’ படத்தை ரஜினிக்கு மட்டும் பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் தனுஷ். முழுப்படத்தையும் பார்த்துவிட்டு தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார் ரஜினி. படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரஜினி இந்த ஒரு படம் போதும் அடுத்த 10 வருஷத்துக்கு அனைவரும் உங்கள் மொக்கை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என ரஜினி தனுஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.

இந்நிகழ்வு குறித்து படக்குழுவினரிடம் கப்ஸா நிருபர் பேசிய போது, “தனுஷிடம் ரஜினி, “ரொம்ப மட்டமாயிருக்கு தனுஷ். இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் இயக்காதீர்கள். இந்தப் படமே உங்கள் இயக்கத்துக்கு ஒரு சான்றாக நீண்ட நாட்கள் இருக்கும். என்று கூறியதாக தனுஷ் தெரிவித்தார். நீங்களும் ஒரு 10 ஆண்டுகள் கழித்து படம் இயக்குங்கள். அதுவரை ‘பவர் பாண்டி’ மொக்கைப் படத்தின் எபெக்ட் அனைவக்கும் இருக்கும், இந்த படம் கொடுக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்களாகும் என்று ரஜினி கூறினார்.

மேலும் நான் பாபா படம் எடுத்து மொக்கை வாங்கினேன், மூத்த மகள் ‘மூணு’ படம் எடுத்து நோகடித்தாள். இளையமகள் கோச்சடையான் என்று லைட்டை கட்டி என்னை கதறவிட்டாள், மருமகனான நீயுமா என்னை கொடுமைப்படுத்துவது? தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் கொடுக்காத நடிகன் என்ற எனது நீண்டகால நற்பெயரை பஞ்சர் ஆக்க வேண்டாம். நாம் நடிப்போடு நிறுத்திக் கொள்ளவேண்டும், இல்லையென்றால் நான் சமீபத்தில் மேடையில் சொன்னபடி கமல்ஹாசன் போல் ஏழையாகவும், கோபக்காரனாகவும் ஆகி விடுவோம். வசூல் “மன்னனாக” இருக்கும் நான், பட வாய்ப்பு தேடி அலையும் “நாடோடி” ஆக வேண்டுமா? காலக் கொடுமையில் நடிகனான நீ என் மகளை வளைத்துவிட்டாய், தொலைகிறது சனியன் என்று திருமணம் செய்து வைத்தால் என் சொத்தையும், நற்பெயரையும் கதிரேசன் வழக்கில் இருந்து தப்பிக்க உன் மச்சத்தை அழித்தது போல் அழிக்கிறாய்” என தனுஷை கடுமையாக திட்டியதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet