சென்னை: ஆர்கே நகர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்த நிலையில், விஜயகாந்த் கடந்த மாதம் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல் நிலை மோசமடைந்ததால் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரேமலதா கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தார். 15 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த 2-ந் தேதிதான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பின்னர் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். ஆர்கே நகரில் விஜயகாந்த் ஒரு நாள் பிரசாரம் செய்த நிலையில் அத்தொகுதி தேர்தலையே தேர்தல் ஆணணயம் ரத்து செய்தது. இந்த நிலையில் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன விஜயகாந்த் ஓய்வெடுக்காமல் பிரசாரம் செய்த காரணத்தால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் ஒரே ஒருநாள் பிரச்சாரம் செய்ததில் ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என தொண்டர்கள் கூறியதால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த் மீண்டும் கோபித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கே வந்து சேர்ந்து விட்டதாக கப்ஸா வார்டுபாய் தெரிவித்தார். ஆஸ்பத்திரியில் இருந்து வந்த கேப்டன், குளூக்கோஸ் குடித்து நாக்கு செத்ததால் பிரேமலதாவிடம் டாஸ்மாக் சரக்கு கேட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்ததையும், போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டு அதில் ஏடிஎஸ்பி ஒரு பெண் கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகியதையும் பிரேமலதா கேப்டனுக்கு லேப்டாப்பில் போட்டுக் காட்டி உள்ளார். இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான கேப்டன், தேமுதிக அலுவலகத்தையும், பார் செட்டப்புடன் உள்ள தனது வீட்டையும் மியாட் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்ற எண்ணி மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சி வருவதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet