சென்னை: பாகுபலி திரைப்படம் கோடிகளை குவிக்க வேண்டும் என்பதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு தமிழர்களுக்கு எதிராக பல்டியடித்திருக்கிறார் சத்யராஜ். அன்று ஒகேனக்கல் பிரச்சனையில் கன்னடர்களிடம் பாடம் கற்றுக் கொண்டேன் என்று ரஜினி கூறியதை கடுமையாக கண்டித்த சத்யராஜ், இப்போது தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக பல்டியடித்தது ஏன் என்றும் தமிழர்கள் சமூக வலை தளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். தனது பாகுபலி படம் பிரச்சினையின்றி ஓட வேண்டும் என்பதற்காக யாருக்காக குரல் கொடுத்தாரோ அந்த மக்களை இன்று கர்நாடகத்திடம் பலி கொடுத்து விட்டாரே சத்யராஜ் என்ற வருத்தம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல், த‌மி‌ழ் ‌திரையுல‌க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது பே‌சிய ர‌ஜி‌னிகா‌ந்‌த் ‘இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவ‌ர்களை உதை‌க்க வே‌ண்டாமா’ எ‌ன்று பே‌சினா‌ர். இத‌ற்கு க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பினரு‌ம் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோடு, இ‌‌னி த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌ங்களை க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்கமா‌ட்டோ‌‌ம் எ‌ன்று கூ‌‌றிவ‌ந்தன‌ர். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த டப்பா திரைப்படம் ‘குசேலன்’ ரிலீசான நேரத்தில், அதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, தனது பேச்சுக்கு ‌வி‌ள‌க்க‌ம் அ‌ளி‌த்த ர‌ஜி‌னிகா‌ந்‌த், தா‌ன் க‌ர்நாடக ம‌க்களை அவ்வாறு கூ‌ற‌வி‌ல்லை. ஒகேன‌க்க‌ல் தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌‌தி‌‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌‌த்து வரு‌ம் வா‌ட்டா‌ள் நாகரா‌ஜ் போ‌ன்றவ‌ர்களை‌த்தா‌ன் அ‌ப்படி கூ‌றினே‌ன் எ‌ன்று சமாளித்தார். தற்போது இதே போன்ற பிரச்சினையில் சிக்கிய சத்யராஜ் பேட்டியில், “நான் பாகுபலி படத்தில் மிகச் சிறிய தொழிலாளி தான். என்னுடைய செயலுக்காக பாகுபலி படத்தின் விநியோகஸ்தர்களை பாதிக்காமல் இருக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இனி வரும் காலங்களில் விவசாய பிரச்சனைகள காவிரி பிரச்சனை, தமிழீழ பிரச்சனை மற்றும் தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருவேன். நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருக்கவே விரும்புகிறேன். என்னால் பிரச்சனை வரும், தொல்லை வரும் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தால் என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம். ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதைவிட எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பது, இறப்பதுதான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி.” என்று சத்யராஜ் கூறியுள்ளார்.

சத்யராஜுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி, இந்திய அளவில் தமிழ் நெட்டிசன்கள் நேற்று #Justiceforsathyaraj என்று ஹேஷ்டேக் போட்டு தம் கட்டிக்கொண்டிருந்தனர். ஆனால், சத்யராஜ் பல்டியடித்து மன்னிப்பு கேட்டதை பார்த்து மனமுடைந்த தமிழர்கள் #Shameonyousathyaraj என்ற ஹேஷ்டேக்கை உலவவிட்டுள்ளனர். சத்யராஜ் இவ்வாறு பகிரங்க வருத்தம் தெரிவித்திருப்பதை பல்டி என்று ஒரு சாரார் கூறினாலும், இனி தன்னை பிரச்சனைக்குரிய படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றும் தமிழனாக இருப்பதையே பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளதால் பலரும் சத்யராஜின் கருத்துக்கு ஆதரவாகவே பதிவிட்டு வருகின்றனர். சத்யராஜ் மேலும் கப்சா நிருபரிடம் பேசும்போது: “என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே, நான் நடிகன் மகா நடிகன், பணத்துக்காக எந்த சேற்றில் வேண்டுமானாலும் புரளுவேன். பாகுபாலி தமிழ் நாட்டில் வெளியிட கூடாது என்று இங்கு உள்ள மானமுள்ள தமிழர் சொல்ல முடியுமா, முடியாது! ஏன் என்றால் நாம் அப்படி, அதான் கை எந்துறோம் அவன்கிட்ட ,கன்னடன் வீரன் மன்னிப்பு கேளு என்றான் நன் கேட்டேன். ரஜினி ஒடச்சா பொன்சட்டி, சத்யராஜ் ஒடச்சா மண் சட்டியா?” என்று தன்னை விமர்சித்த ரசிகர்களை கீழ்த்தரமாக பேசினார்.

பகிர்

There are no comments yet