சென்னை/மதுரை: வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் அட்டைகள் வைத்து புதிய முயற்சியை மேற்கொண்டார். அதாவது, கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூட செல்லூர் ராஜா முடிவு செய்தார். அவ்வாறு மூடினால் நீர் ஆவியாமல் தடுக்கப்படும் என்று பேட்டி அளித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்பட்டவில்லை என்றும் அதனால் தான் அவரது ஆன்மா சாந்தியடையாமல், நினைவிடம், போயஸ் இல்லம் போன்றவற்றில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. சிகலாவை பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெயலலிதாவின் ஆவி பன்னீர் செல்வத்தின் உடம்பிற்குள் புகுந்து விட்டதோ என்ற நிலையில் பன்னீர் செல்வம் சசிகலா முதல்வராவதை தடுத்து அதிமுகவை சின்னா பின்னப்படுத்தி விட்டார்.

இதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜு யோசனையின் பேரில், ஜெயலலிதாவின் ஆவியாவதை தடுத்து ஓபிஎஸ்சுக்கு செக் வைக்க ஜெயலலிதாவின் சமாதியில் தெர்மாகோல் அட்டைகள் வைத்து மூட சின்னம்மா சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து உத்திரவிட்டுள்ளதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet