சென்னை: பிரதமர் நரேந்திர மோடி டீ விற்பனை செய்த ரயில்வே ஸ்டேஷன், எட்டு கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட உள்ளது. குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டத்தில் உள்ளது வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன். இங்குள்ள டீ கடையில், தன் சிறு வயதில் தந்தையுடன் டீ விற்பனை செய்து வந்ததாக, 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டார். இந்த ரயில்வே ஸ்டேஷன் தற்போது மேம்படுத்தப்பட உள்ளதாக, ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ”இதற்காக, 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாத்நகர் – மேக்சானா ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது. வாத்நகர் உள்ளிட்ட மூன்று பகுதிகளை, சுற்றுலா தலங்களாக தரம் உயர்த்த, 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தான், வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்படுகிறது,” என்றார்.

இது குறித்து மோடிக்கு முட்டுக் கொடுத்து பேட்டி அளித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: “என்னைப்போல் டீ ஆற்றிய ஒருவர் தன் அயராத உழைப்பால் படிப் படியாக முன்னேறி இன்று ஒரு உன்னத நிலையை அடைந்திருக்கிறார். தன் மீது வீசப்பட்ட வசை மற்றும் துவேஷங்களை பொருட்படுத்தாது அவை ஒவ்வொன்றையும் முன்னேறும் படிக்கட்டுகளாக மாற்றி வெற்றிகண்டவர் மோடி. நானும் மோடி போலத்தான்.. முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கி தொழில் செய்தேன். பின்னர், லாரிகளுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழிலிலும் கால் பதித்தேன். பின்னர் பால் பண்ணை நடத்தி சம்பாதித்தேன். உபரியாகும் பாலை காசாக்க எனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தேன். இந்தக்கடையே எனக்கு வாழ்வாதாரமாக இருந்தது. எனவே எனது டீக்கடையை புதுப்பிக்க 10 கோடி இந்த எடப்பாடி அரசு ஒதுக்க வெண்டும். தற்போது பெரியகுளம் செல்ல மதுரை ஆல்லது திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, தேனிக்கு பாசஞ்சர் ட்ரெயினில் ஏறி பின்னர் அங்கிருந்து பஸ்சில் தான் செல்ல வேண்டி உள்ளது. மோடி டீ விற்ற ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்பட உள்ளதுபோல் பெரிய குளத்தில் புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மதுரை ஸ்டஷனை மூடிவிட்டு அங்கு வரும் ட்ரெயின்களை பெரிய குளத்திற்கு திருப்பி விட வேண்டும். நான் வட்டித் தொழில் செய்த பெரியகுளம் மார்க்கெட்டை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தது போக மிச்ச மீதி பணம் இருந்தால் டெல்லியில் அம்மணமாக போராடும் விவசாயிகளுக்கு ஏதாவது பிச்சை போடுவேன்..” என்றார்

பகிர்

There are no comments yet