சென்னை/டெல்லி: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி, தமிழகத்தில் 1,500 மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை நகராட்சிகள் எடுத்துக் கொண்டு அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சி செய்து வருகிறது. சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் 500 மீட்டர் சுற்றளவிலும் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பார்களும் ஏப்ரல் 1-ந் தேதியுடன் மூடப்பட்டன. சென்னை அண்ணாசாலையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த பார்களும் மூடப்பட்டன. இதனால் டாஸ்மாக் வருவாய் கணிசமான அளவு குறைந்துவிட்டது.
எனவே உச்சநீதிமன்றம் வகுத்துள்ள எல்லையைத் தாண்டி டாஸ்மாக் கடைகளை திறக்கும் முனைப்பில் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மாற்றம் கொண்டு வர உள்ளனராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிக்களுக்கு உட்பட்ட சாலைகளாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று பல்வேறு பணிகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளை விரைந்து நடைமுறைப்படுத்தி செலவுகளை குறைக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறைகளுக்கு செலுத்த வேண்டிய செலவினங்கள் மற்றும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மாநிலத்தின் முக்கிய சாலைகள், ஊராட்சி சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வசம் எடுத்துக் கொள்ள மன்றத் தீர்மானம் நிறைவேற்றுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றி வரும் 25ம் தேதிக்குள் நகராட்சி நிர்வாக அலுவலகத்திற்கு தனிநபர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
இது குறித்து விவசாயிகளை சந்திக்கச் சென்றது போல் மோடியைப் பார்க்க டில்லி விசிட் அடித்த எடுபிடி பழனிசாமி நம் கப்சா நிருபரிடம் பேட்டி அளித்தார்”: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி/நகராட்சி மன்றங்கள் இல்லாத சூழலில், அப்பட்டமான பொய்க் காரணங்களை கற்பித்து அதிகாரிகள் மூலம் தேசிய/மாநில/மாவட்ட முக்கிய சாலைகளை மாநகராட்சி/நகராட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து குடிமகன்கள் வயிற்றில் பீர் வார்க்க சட்டவிரோதமாக அரசு முயற்சித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அத்துமீறிய நடவடிக்கையை தமிழக குடிமகன்கள் ஆதரிக்க வேண்டும். சட்ட விரோதமாக வகைமாற்றம் செய்யப்படும் சாலைகளில் பழையபடி மதுகடைகள் அமைக்கப்படுவதுடன், மோடி அவர்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பணம் இல்லாமல், புதிய நோட்டுக்களை ஏற்கும்படி இயந்திரங்கள் பொருத்தப்படாமல் மூடிக்கிடக்கும் ஏடிஎம் மையங்களிலும் மினி டாஸ்மாக் கடைகள் திறக்க மோடியிடமே முட்டுக் கொடுத்து கோரிக்கை விடுத்துவிட்டு வந்துள்ளேன்.” என்றார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்ற கோரிக்கைகளுடன் இந்த முக்கியமான கோரிக்கைவிடுத்து பேசினார். முன்னதாக அவர் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் பெற்றுக் கொண்ட கோரிக்கை மனுக்களை இன்று சிறுநீர் குடித்து போராட்டம் நடத்திதை கண்டித்து, டாஸ்மாக் வளம் பெருக பீர், பிராந்தி கொடுத்து அவர்களின் போராட்டத்தை முடித்து வைத்ததாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks