சென்னை: அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகு உகந்த சூழல் உருவாகியிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், சசிகலா மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னம் தங்க ளுக்கே தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரின.

இதற்கிடையில், ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளும் தற்போது இணையும் நிலைக்கு வந்துள்ளன. இரு அணிகளும் இணைவதற்கு சசிகலா குடும்பத் தினர் கட்சியில் இருக்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நிபந்தனையை ஓபிஎஸ் தரப்பு வைத்தது.

இதையடுத்து, தினகரனை ஒதுக்கி வைத்து ஓபிஎஸ் அணியுடன் இணைய, தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான நிர்வாகிகள் முடிவெடுத்து அறிவித்தனர். ஆனால், அதிமுகவில் இருந்து தானே ஒதுங்கிவிட்டதாக தினகரன் அறிவித்தார். இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், “அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் உருவாகியிருக்கிறது. தினகரனை ஏதாவது ஒரு வழக்கில் முன்பே கைது செய்து இந்த இணைப்பிற்கு உதவ பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். அதை செவ்வனே நிறைவேற்றி எங்களுக்கு உதவும் மோடிக்கு நன்றி. அதிமுவின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒரே தலைவர் மோடி மட்டுமே” என்றார்

There are no comments yet