சென்னை: “நான் இன்னும் இயக்குநராகத் தயாராகவில்லை” என ‘ஓப்பனாக’ தனுஷ் தெரிவித்து உள்ளார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் கொண்டவர் தனுஷ். இவர் முதன்முதலாக இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் சமீபத்தில் அரசை ஏய்க்க வரிவிலக்கு வேண்டி ‘ப.பாண்டி’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து தரப்பினராலும் பாராட்டைப் பெற்றுள்ளது இந்தப் படம். ரஜினி உள்பட பல பிரபலங்கள் இந்தப் படத்தைப் பொய்யாக பாராட்டியுள்ளனர். ரஜினி நடித்த கபாலி படத்தை தூசு தட்டி பட்டி டிங்கரிங் பார்த்து தரலோக்கல் கபாலியாக தமிழ் ரசிகனை பாடாய்ப்படுத்த களமிறங்கி உள்ளது ப.பாண்டி

ஆனால், இந்தப் படத்துக்காக ‘கொடுமை’யாக உழைத்துள்ளார் தனுஷ். இயக்கத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்வதற்காக குறும்படங்களை இயக்கத் தொடங்கிய தனுஷ், இதுவரை 17 வெறும்படங்களை இயக்கியிருக்கிறார். பள்ளிப் படிப்பை 10ஆவது வகுப்பில் நிறுத்தியதால், ஒவ்வொன்றிலும் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி என ஒரு பாடம் கற்றுக் கொண்டு பார்டர் பாஸ் ஆகியுள்ளாராம். ஆனால் படங்களில் ஒன்று கூட தனது பிராக்ரெஸ் ரிப்போர்ட் போல வெளியிட தகுதி இல்லாதவை என தெரிவித்தார். தான் இன்னும் முழுமையான இயக்குநராகவில்லை என்கிறார் தனுஷ். “நான் இன்னும் இயக்குநராகவில்லை. ஒரு குருட்டு நம்பிக்கையில் இயக்கியதுதான் இந்தப் படம்” என ஓப்பனாகப் பேசியுள்ளார் தனுஷ். கஸ்தூரிராஜா ரஜினி என இரண்டு அப்பாக்களை தொடர்ந்து மூன்றாவது அப்பா மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்காலும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கின் போக்கில், கதிரேசன் தம்பதியினர் தனுஷிற்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடவேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடம்பில் இல்லையென்றாலும், சில தழும்புகள் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென தனுஷ் தரப்பில் கோரியது போல் ‘பிரபலமான நடிகர் என்றால் பல பேர் உரிமை கொண்டாடி வருவார்கள், ஒவ்வொருவருக்காகவும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடியாது’ என்பதை ஏற்றுக் கொண்டு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ப.பாண்டி படத்திற்கு ராஜ்கிரண் கால்ஷீட் வாங்கியது போல், வழக்கின் தீர்ப்பு தனுஷ் தரப்பால் விலை கொடுத்து வாங்கப்பட்டது. நீதிபதியின் கப்சா உத்தரவில், ‘பிளஸ் 1 படிக்கும்போது எழுதி வைத்த கடிதத்தில் ஒரு பிழை கூட இல்லை, ‘என்னை தேட வேண்டாம்’, என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர ‘சினிமாவில் நடிக்க செல்வதாக’ குறிப்பிட வில்லை, 2002 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் தேடவோ கண்டுபிடிக்கவோ முயற்சிக்கவில்லை, தனுஷ் தரப்பு நோட்டீசை பெற்றுக் கொண்டதை வைத்து வழக்கை உண்மை என ஏற்க முடியாது. தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தின்போது எந்த சந்தேகமும் எழுப்பவில்லை. திருமணத்தை தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கவில்லை. தனுஷ் நடிப்பில் முதன் முதலில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு 2002 மார்ச் 15இல் திரைப்பட தணிக்கை வாரியம் சான்று அளித்துள்ளது. அது ‘ஏ’ செர்டிபிகேட்டுடன் வந்த மிகச் சிறந்த படைப்பு என்பதாலும், கலைச்செல்வன் வேறு, தனுஷ் வேறு என்பதாலும், தனுஷ் போல குத்து டான்ஸ் ஆட தமிழ் சினிமாவில் இன்னொரு ஆள் கிடைக்க மாட்டார் என்பதாலும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தனுஷிடம் கதிரேசன் தம்பதி சில லட்சங்களாவது கேட்காமல் வெறும் 65 ஆயிரம் ரூபாய் மட்டுமே கேட்டதும் சந்தேகத்தை எழுப்புகிறது, அதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. தனுஷ் கப்சா நிருபரிடம் “கதிரேசன் டிஎன்ஏ சோதனை கோரி கொடுத்த டார்ச்சராலும், மச்சங்களை ‘அழிலப்பர்’ கொண்டு அழித்தது கண்டுபிடித்த மன உளைச்சலாலும், “சீடன், யோகி, பொறி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுப்ரமணியம் சிவாவை வைத்து இயக்கி முடித்து என் பெயரை போட்டுக் கொண்டேன்” என்றார் அதிர்ச்சி கிளப்பி முடித்தார்.

பகிர்

There are no comments yet