சென்னை: திருட்டு விசிடியை ஒழிக்கக் கோரியும் படங்கள் இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க கோரியும் தமிழ்த்திரையுலகில் மே 30ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்திய திரைப்படத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமுலுக்கு வரும் நிலையில் திரைப்படங்களுக்கு குறைந்த அளவிலேயே வரி விதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கைய்ய நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார் தயாரிப்பளர் சங்கத்தலைவர் விஷால். அத்துடன் திருட்டு விசிடி, மற்றும் இணைய தள வெளியீடு தடுப்பு குறித்தும் மத்திய அரசின் உதவி தேவை என கூறி வருகிறார்.

இந்த நிலையில் விஷால் கப்சா நிருபரிடம் கூறியதாவது: “நன் கஷ்டப்பட்டு கன்னத்தில் அறை வாங்கி, நாட்டாமை மகள் வரலட்சுமி லிவிங் டு கெதரை எல்லாம் விட்டுக் கொடுத்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களின் தலைவனாக சினிமாத் துறையை என் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன். நான் சம்பாதிக்கும் நேரம் வந்ததும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களின் உண்மையான வருமானத்தை கணக்கு காட்ட சொல்கிறார்கள், வரி கட்ட சொல்கிறார்கள். நானே நட்சத்திர கிரிக்கெட்டில் 3 கோடிக்கு மேல் சுருட்ட முடியாமல், என் மாஸ்டர் பிளான்படி கமல்ஹாசன் தலைமையிலேயே வெங்கய்யா நாயுடுவிடம் கொடுக்கப்பட்ட மனுவில், கமலஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விழா எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே, ஸ்டாலின் சட்டை கிழிப்பு போன்ற ஐடியா இது. என்னை மாதிரி தகுதி இல்லாதவர்களும், ஆளுமைத்தன்மை இல்லாத நபர்களும் தலைமை பொறுப்புக்கு வந்தால் இது போன்ற காமெடிகள் அடிக்கடி நடக்கும்.. கமல் இந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியின் தொடக்கமே தனக்கு விழா எடுக்க தமிழ் திரையுலகம் சார்பில் மனு கொடுக்க கூறி அதற்கு அவரே தலைமை தாங்கிய காமெடி நிகழ்வு,” என்றார்.

மேலும் தொடர்ந்தவர், “தமிழ் சினிமா தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதற்கு பிரதான காரணம் நடிகர்களின் சம்பளம். இதனை சரிப்படுத்த தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் நான் எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை. எனக்கு ஆலோசனை கூறி வரும் ஞானகுரு கமல் சம்பளமும் குறைக்கப்பட வேண்டும் என்பதால் நடிகர்கள் சம்பளம், தயாரிப்பு செலவு அதிகரிப்பு இவைகளை திசை திருப்ப நடிகர்கள் நடத்தும் நாடகமே கலந்தாய்வுக் கூட்டம் என்பது. சந்துல சிந்து பாடுவது என்கிற பழமொழி போல ‘கிடைக்கிற கேப்ல எல்லாம் தமிழ் சினிமா என் தலைமையில, என் கட்டுப்பாட்டுல’, என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும்.” என்றார்

பகிர்

There are no comments yet