சென்னை: கடந்த 24-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலுக்கு இருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்த கும்பல் மற்றொரு காவலாளியான கிருஷணபகதூரை கட்டி போட்டுவிட்டு ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அறைக்குள் புகுந்து அங்கிருந்த சூட்கேஸ்களை உடைத்து அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்து சென்றிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தொடர்புடையதாக 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். காயமடைந்த காவலாளி கிஷன்பகதூர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டரில் வரைப்படம் வரைந்து அதை வைத்து தேடி வந்த நிலையில் நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை வளையத்தில் சிக்கிய 8 பேரில் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனது பைக்கில் வந்த போது சென்னை நோக்கி வந்த கார் ஒன்று கனகராஜ் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். கொள்ளை வழக்கில் முக்கிய தடயங்களை மறைக்க கனகராஜ் கார் ஏற்றி கொல்லப்பட்டிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான சாயன் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாயான் பாலகாட்டில் இன்று சாலை விபத்தில் சிக்கினார். சாயான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்றபோது நின்றிருந்த லாரி மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த டீபு, சந்தோஷ், சதீஷன் உள்ளிட்ட 4 பேரை கூடலூர் தேவாலா பகுதிக்கு அழைத்து வந்த போலீஸார் தொடர்ந்து 6 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வயநாடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 8 பேரில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று எடுக்கக்கூடிய இடம் கொடநாடு எஸ்டேட். சுமார் 800 ஏக்கர் இடமான இந்த எஸ்டேட்டிற்கு 10 நுழைவுவாயில்கள் உள்ளன. இதில் 10வது கேட்டில் தான் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

இது குறித்து காவல் துறை ஆணையர் அளித்த் குசும்பு பேட்டி: “மக்கள் ஜெயலலிதாவின் கோட நாடு எஸ்டேட் காவலாளி, டிரைவர் போன்றவர்கள் கொலை செய்யப்படுவது பற்றி அச்சம் கொள்ள வேண்டாம். எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். சாதிபாட்சா என்பவர் கூட முதலில் தற்கொலை என்று சொன்னோம் அப்பறம் சென்ற வருடம் வேறு தகவல் வந்தது அது போல இந்த விசியத்திலும் வேறு விசயங்கள் வரும் அல்லது என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்து பாருங்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஸ்வாதி வழக்கில் ராம்குமார் என்ற அப்பாவி இளைஞர் கரண்ட் வயரைக் கடித்து தன் கவுண்டரில் பலியானார். அதுபோல் சோழநாடு சோறுடைத்து, கொட நாடு கொலையுடைத்து என்பது போல், கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், குற்றத்தை எண்ணி வருந்துவதுடன், தானகவே மன நிலை பாதிக்கப்பட்டு தங்களை தாங்களே தண்டித்துக் கொள்கிறார்கள். அதுபோக மீதி இருப்பவர்களை காவல் துறை சாலைவிபத்து போன்ற என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறோம். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களே கூலாக ‘உள்ளே’யும் ‘வெளியே’யும் நிழல் ஆட்சி நடத்திக் கொண்டும், கட்சிப் பொறுப்புக்கும், சின்னத்திற்கும் அடித்துக் கொண்டும் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரங்கேற்றும் கடைசி கட்ட சொத்து அபகரிப்பு நாடகங்கள் தான் இவை. ஆட்சி அவங்களோடது. அப்பறம் என்ன? மக்கள் தொலைக்காட்சியில் நாளொரு கொள்ளை பொழுதொரு கொலை என பிரேக்கிங் நியூஸ் பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டியது தான்.” என்று குசும்புடம் கூறி முடித்தார்.

பகிர்

There are no comments yet