சென்னை: பாகுபலி நேற்று உலகம் முழுக்க 2ஆவது பாகமாக வந்துள்ளது. இதுவரையும் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் அள்ளி வருகிறது. இந்த கதையை படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் முன் கதை பிரபல ஹிந்தி எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய சிவகாமி பர்வதம் என்னும் நாவலில் இருந்து உருவப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாவலின் படி சிவகாமியின் சிறு வயதில் அவரது அப்பாவை பொய் பழி சுமத்தி கொன்றுவிடுவாராம் மகிழ்மதியின் அரசன். மனதில் வெறிவைத்து பின்னாளில் தன் அப்பா தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்து, மகிழ்மதியை வென்று மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரசியாக அரியாசனம் பிடிப்பாராம். இதன் பின் தான் பாகுபலி கதை தொடர்கிறதாம். ஒட்டுமொத்த இந்தியாவே தற்போது இந்த படத்தை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாகுபலி படத்தையும், அதை இயக்கிய ராஜமௌலியையும் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றுள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார். அதுவும் ஒரு பிராந்திய மொழியில் உருவான படம் என்பதால் இது பாராட்டுக்கு உரியது எனவும் கூறியுள்ளார்.
மக்களிடையே ‘பாகுபலி 2’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் தனது நேர்மறையான கருத்தை பதிவு செய்துள்ளார். படம் கொண்டாடப்பட்டு வருவதற்கு தங்கர் பச்சான் “மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம் என்றைக்கு உருவாகுமோ அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். பாகுபலி உலக சினிமா என முன்னாள் இயக்குனர் சமுத்திரக்கனி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட கலவையான விமர்சனங்களை கேள்விப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பாகுபலி இரண்டாம் பாகத்தை டவுன்லோடு செய்து பார்த்துவிட்டு நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: படத்தில் இரண்டு இடத்தில் மரம் வெட்டும் காட்சிகள் வருகின்றன. இது ஒன்று போதாதா பாகுபலி பாமகவின் ஆதரவு பிரசார படம் என்று நிரூபிக்க? அது மட்டுமல்லாமல் பாகுபலியியில் சாம்ராஜ்யத்தின் பெயர் மகிழ்மதி. மதி என்றால் நிலவு என்று பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை முழுநிலவு விழா நடத்தும் ஒரே கட்சி எங்கள் கட்சி மட்டுமே. பாகுபலி படத்தில் வில்லனாக வரும் பல்வால்தேவன், கதாநாயகி தேவசேனாவை காதலிப்பது போல நாடகம் ஆடுவான். இப்படி எங்களைப்போல் நாடகக் காதலை எதிர்ப்பதால், இது நிச்சயம் பாமக வின் கதைதான் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. மரத்தை வெட்டி பாமக பெருமை சொல்லும் பாகுபலி-2 படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மறுத்தால் மரங்களை வெட்டி தியேட்டர்களை முடக்கப் போகிறோம். வர்தா புயலுக்கு சரிந்த மரங்களின் மிச்சம் போதும் எங்கள் எச்சத்தை தமிழகத்தில் விட்டுச் செல்ல” என மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து நமது கப்ஸா நிருபருக்கு பிரபல புலனாய்வு செய்தியாளர் சவுக்கு சங்கர் பேஸ் புக் இன்பாக்ஸ் பெட்டியில் அளித்த பேட்டியில் கூறியபோது: இது ஆண்டைகளின் படம் தான், இது மற்றவர்களுக்கு ஒரு பாடம். இந்த படத்தில் டெலிபோன் உரையாடல்கள் இருந்தால் என்னை போன்றவர்களுக்கு சவுகரியமாக இருக்கும். ஆனால் எந்த காலத்திலும் ஆண்டைகள் ஆனாதைகளாகி விடக்கூடாது. எனவே எடுபிடி பழனிச்சாமி அரசு அய்யா ராமதாஸின் குரலுக்கு செவி சாய்க்கா விட்டால் அவர் நமது மரத்தை சாய்த்து விடுவார் என நம்புகிறேன் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks