சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கட்சியினர் சிலருடன், சென்னை, மெரினா கடற்கரைக்கு சென்று, அங்கு அமர்ந்து கொண்டு, கட்சியினரிடம் பேசி வருகிறார். இதன் பின்னணியில் பலமான ஜோதிட காரணங்கள் உண்டு என, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: இன்றளவிலும் தன்னை நாத்திகவாதியாக காட்டிக் கொள்ளும் ஸ்டாலின், முழுமையான ஆன்மிகவாதியாக மாறி விட்டார். குடும்ப ஜோதிடர் என்ன சொல்கிறாரோ, அதையெல்லாம் தொடர்ந்து செய்யத் துவங்கி விட்டார். அவர், சிம்ம ராசியைச் சேர்ந்தவர். அவருக்கு சூரியனால் கட்டாயம் லாபம் ஏற்படும். அதனால், சூரியன் சங்கமிக்கும் இடங்களில் எல்லாம் அவர் தொடர்ச்சியாக செல்ல வேண்டும். சூரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று, அவருக்கு ஜோதிடர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதெல்லாம் எப்படி வெளிப்படையாக செய்ய முடியும் என அவர் கேட்க, அதற்கும், ஜோதிடர் தரப்பில் இருந்து வழி சொல்லப்பட்டிருக்கிறது.
அதன்படிதான், திருவாரூர், தியாகராஜர் கோவிலுக்குச் சென்று, பிரதோஷ நாளில் கட்டளைதாரராக மாறி, பூஜைகளை செய்திருக்கிறார். கடந்த 24ம் தேதி, பிரதோஷ நாளில், திருவாரூர், கமலாலயம் குளத்தின் நடுவில் உள்ள சிவனுக்கு பூஜைகள் செய்தவர், அன்று இரவு, கமலாலயம் குளத்தை இடது – வலமாக சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். தொடர்ச்சியாக, சிவன் சன்னதி உள்ள ஊர்களுக்குச் சென்று, பிரதோஷ நாளில் சிவனை வழங்க முடிவெடுத்துள்ளார். இதற்கிடையில், சூரியன் உதிக்கும் இடமான கிழக்கு பக்கம் அமர்ந்து, சூரியனை நினைத்து தியானம் செய்து வழி பட வேண்டும் என, ஜோதிடர் அறிவுத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான், அவர் அடிக்கடி, மெரினா கடற்கரைக்குச் சென்று, சூரியன் உதிக்கும் திசையை நோக்கி, அமர்ந்து தியானம் செய்கிறார். பின், கட்சியினருடன் சேர்ந்து ஆலோசித்து விட்டு, வீடு திரும்புகிறார். இப்படியெல்லாம் அவர் தொடர்ச்சியாக செய்வதன் மூலம், விரைவில், அரசியலில் மிக உயர்ந்த் இடத்தை அடைவார் என்றும், ஜோதிடர்கள் சொல்லியுள்ளனர். ஜோதிடர் சொல்வதையெல்லாம் ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். பரிகாரம், அவரை காக்குமா என்பதுதான் தெரியவில்லை.
நள்ளிரவு தியானம் குறித்து அறிந்த நமது கப்சா நிருபர் சுண்டர்காரன் வேடத்தில் மெரினா சென்று செய்தி சேகரித்தார்: அதில் ஸ்டலின் நள்ளிரவு நாடகம் குறித்து பல தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் சின்னம்மா தரப்புக்கு ஒத்து ஊதிய ஓபிஎஸ் திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்து போர்க்கொடி தூக்கினார், அது முதலே அதிமுகவில் பிளவுகளும், போட்டி பொறாமைகளும் தலை தூக்கின. பின்னர் தமிழக அரசியல் கேலிக்கூத்தாகி விட்டது. இதை சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியைக் கலைக்க பலவாறாக முயன்ற கட்சிகளும் திமுக முன்னோடி. தற்போது அது சாத்தியமில்லாததால் மெரினாவில் தியானம் செய்ய தன் கட்சியினரின் முன்னோடிகள் சமாதி தேடி அலைந்து வருகிறார் ஸ்டாலின், அண்ணா சமாதியில் தியானம் செய்யலாம் என்றால் அவர் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான தலைவராக போய்விட்டார். ஆனாலும் கலைஞர் சமாதிக்காக காத்திருப்பேன் என்று மனம் தளராத ஸ்டாலின் கட்டாந்தரையில் பிளாஸ்டிக் சேர் போட்டு அமர்ந்து தியானத்தில் ஈடுபடுகிறார். மந்திர உச்சாடனங்களை ஜெபிக்கும் போது, கருணாநிதியையும் கெட்ட வார்த்தைகளால் சபிக்கிறார். ராத்திரிவேளையில்…பேய், பிசாசு, ஆவிகள் உலவும், நடமாடும் நேரத்தில் தியானம் பண்ணுகிறார். அப்படி அந்த நேரத்தில் தியானம் செய்யும்போது சூனியம் வைக்குறவனும், சூனிய எடுக்குறவனும் துணைக்கு நிற்கிறார்கள். இது குறித்து திமுக விசுவாசி ஒருவர் வருத்தம் தெரிவித்து கப்சா நிருபரிடம் “மாந்திரீகர்கள் தான் பிணம் எரியும் சுடுகாட்டுல உட்கார்ந்து… மண்ட ஓட்ட வச்சு.. பொம்ம வரைஞ்சு… பிசாசு, பேய், ஆவிய வணங்குவாங்க… பூஜை செய்வாங்க… பெரியாரிசத்திற்கு நாமம். திராவிட இயக்கத்துக்கு பட்டை நாமம். தனக்கு என்றால் பதக்கும் குறுணி கொள்ளுமாம் கோபாலபுரம் கோயிலைக் கடக்கும்போது துண்டைத் தவற வீட்டு குனிந்து எடுப்பதுபோல் வணங்குவார் அப்பா கருணாநிதி – இப்ப மகனும் சேர்ந்திருக்கிறார்.. இருட்டில் உட்கார்ந்து சூரிய வழிபாடா? அதி காலையில் கடற்கரை சென்று சூரியனை வழிபட்டால் நல்லது நடக்கும். சின்னம் உதய சூரியன். ஆனால் அவரை வழிபட தயக்கம். ஆனால் பதவியும் வேண்டும். இது தான் பகுத்தறிவு. இதுவரை செய்த துரோகங்களுக்கு, கோவில் கோவிலாக போய் பணிவிடை செய்தாலும் இந்த ஜென்மம் போதாது! பதவி ஆசை நாத்திகர்களையும் எப்படியெல்லாம் படுத்துகிறது, ஒரு ஜோசியன் இவர்களை கட்டுப்படுத்த முடியும் என்றால், இவர்களை நம்பி நாட்டை எப்படி ஆழச்சொல்வது? நாட்டையே விற்றுவிடுவார்கள், நான் மக்களுக்கு பட்டை போட்டு ஊழலில் கொட்டை போட்ட ஓபிஎஸ் அணிக்கு போகலாம் என்று இருக்கிறேன்” என்று புலம்பினார்.
There are no comments yet
Or use one of these social networks