சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் கூட்டாளிகள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், எம்.பி.,மைத்ரேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஒரு குடும்பத்திற்குள் சிக்கி விடாமல் அதிமுகவை மீட்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. சசிகலா பொதுச் செயலாளர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைவரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கபட நாடகத்தை நடத்துகின்றனர். பிறகு எப்படி இரு அணிகளும் இணைவது பற்றி நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் கூட்டாளிகள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரனின் கூட்டாளி முதல்வர் பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது அதிமுக அணிகள் இணைப்பை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இது குறித்து ஓபிஎஸ் கப்சா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்: தினகரனும் நானும் முன்னாள் கூட்டாளிகள், அனால் அவர் என்னை இப்போது ‘அன் பிரண்ட்’ செய்து வித்திட்டார். இப்போது மோடியும் நானும் போல தினகரனும் எடப்பாடியும் கூட்டாளிகள். இவர்கள் கூட்டாளிகள் என்ற ரகசியத்தை டெல்லி போலீஸ் சென்னையில் இருக்கும் போதே தெரிவித்து இருப்பேன், அவர்கள் எடப்பாடியையும் அள்ளி சென்று தீகாரில் தினகரனோடு அடைத்து இருப்பார்கள்.

மேதினம் வரை காத்திருந்தேன். என்னை தனது கட்டுக்குள் கொண்டு வர மோடி அவர்கள் புதிய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், எனது ஆருயிர் நண்பர் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. மணல் குவாரிகளின் மன்னன் போல் செயல்பட்டு வந்த சேகர் ரெட்டி, வருமானவரித் துறை அதிகாரிகளின் ரெய்டில் சிக்கியதுடன் அடுத்தடுத்த வழக்கில் சிறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டியால் ஜாமீனிலும் வெளியே வரமுடியமால் அல்லாடிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் குனிந்து குனிந்து பழக்கப்பட்ட நான் மோடிக்கு சலாம் போட்டுக் கொண்டிருக்கிறேன். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்படியா நானா, யார் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற போட்டி மட்டுமே நடைபெறுகிறது. அதை தான் தர்மயுத்தம் என்று சொல்கிறேன். மக்களுக்கு இது ‘தர்மசங்கட’ யுத்தம். நான் மீண்டும் முதல்வராகும் வரை இப்படித்தான் வாயலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பேன்” என்றார்.

பகிர்

There are no comments yet