சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் ஏற்கனவே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். திரையுக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் படக்குழுவை பாராட்டி வருகிறார்கள். ரஜினிகாந்த் பாகுபலி 2 படத்தை பாராட்டியது கடவுளே வாழ்த்தியது போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் ராஜமவுலி. பாகுபலி 2 படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருந்ததாவது, பாகுபலி 2…இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமவுலி மற்றும் அவரின் குழுவுக்கு சல்யூட்!!! மாஸ்டர்பீஸ் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாகுபலிகுறித்த சர்ச்சைகளும்உலாவரத் துவங்கி உள்ளன. “சத்ரிய காவியமான பாகுபலி பார்க்கும் போது சத்ரியனான என் உச்சந்தலையில் ஒரு டன் வெயிட்டுல கெத்து ஏறி திமிரா தெனாவெட்டா நிக்குது! கர்வமா அகந்தையா மீசையை வருடி கொடுக்கிறது விரல்கள், இந்த உணர்வு எனக்கு மட்டும்தானா???” என்று ஆனந்த் வாண்டையார் என்பவர் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். படத்தில் ‘அரிக்கட்டிக்க’ சாதியை புண்படுத்தும் விதத்தில் சொல்லியிருக்கிறார்கள் என அந்த சாதி அமைப்பின் தலைவர் ஒருவை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். பாகுபலி 2 தமிழ்பதிப்பில், கட்டப்பாவை நாய் அடிமை நாய் என அசிங்கப்படுத்துவது போல் காட்சி உள்ளது. மற்றொரு பக்கம் இந்துத்வாவை தூக்கி நிறுத்திய ராஜமவுலி வாழ்க என்ற கோஷங்களும் கேட்கின்றன. அந்தப்படம் க்ஷத்ரியர்களின் கதை என்பதால், தங்கள் ஜாதி, க்ஷத்ரியர்களா? இல்லையா? என்று பலர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்…!
பாகுபலி வன்னியர் கதை இல்ல! தேவர் கதை பல்வாள் தேவன், பிங்களத் தேவன் என கதாபாத்திரங்கள் பெயர்கள் வருகின்றன என்கிறார் ஒருவர். தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆட்சி செய்வதாக படத்தில் காட்டுகிறார்கள் இது தமிழ்நாட்டுக்காகவே காட்டப்பட்ட மிகப்பெரிய குறியீடு என்கிறார்கள். இதற்கிடையே கலைப்போலி ரஜினியை வைத்து கபாலி என்ற தோல்வி தலித் படத்தை இயக்கிய அட்டகத்தி ரஞ்சித் “இயக்குநர் ராஜமௌலி சமூக கருத்துக்கள் சொல்லவில்லை” என் கருத்து தெரிவித்து விவாத பொருளாகி இருக்கிறார். அட்டகத்தி படத்தில் ஒரு ஆண் பல பெண்களை காதலிப்பது போல் காட்டாமல் இந்துக் கடவுள் ராமர் போல் கதாநாயகனை பாகுபலியில் சித்தரிப்பது பிடிக்காததால் கொதித்துப்போயுள்ளார். படத்துல பல்வாள்”தேவன்”னு சொல்லும்போது வயிறு எரிஞ்சுருக்கும் அதான் புலம்புறாரு போல என கப்சா நிருபர் கிண்டலடிக்கிறார்.
மீண்டும் ரஜினிவீட்டுக் கதவை தட்டிய ரஞ்சித், வன்னியர்களுக்காக பாகுபலி 2 எடுத்தது போல் மீண்டும் தலித்துகளுக்காக கபாலி 2 எடுக்க வேண்டும் என்று கெஞ்சியுள்ளார். “உங்களை (ரஜினியை) வைத்தே ஒரு தோல்விப்படத்தை கொடுத்ததால் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளேன். சினிமாவில் விட்டதை சினிமாவில் தான் பிடிக்க வேண்டும், எனவே எனக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குங்கள்” என கேட்டதாக தெரிகிறது. சாதிய உணர்வு மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கும் சூழலில் தனது படங்கள் மூலமாக மீணடும் சாதிய வெறியை தூண்டி விட்டு கல்லா கட்டலாம் வாங்க கபாலி என்று ரஜினியிடம் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது
There are no comments yet
Or use one of these social networks