டெல்லி: இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்று அவர்களின் தலையைத் துண்டித்த பாகிஸ்தான் ராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது. அதோடு கொல்லப்பட்ட 2 ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்து காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டனர் பாகிஸ்தான் ராணுவத்தினர். காஷ்மீரில் இரு இந்திய வீரர்களைக் கொன்று உடல்களை சிதைத்தது தொடர்பான போதிய ஆதாரங்கள் இருப்பதாக பாகிஸ் தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவை வெகுவாக சின மடைய வைத்திருப்பதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கதி எல்லைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தானின் சிறப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்து இரு இந்திய வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தலையை துண்டித்தனர். இந்த சம்பவம் ராணுவத்தினரை யும், நாட்டு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைத் தொடர்ந்து ‘ஹாட்லைன்’ தொலைபேசி மூலம் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர், பாகிஸ்தான் தலைவரை தொடர்பு கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தியா பதிலடி கொடுப்பதற்கான சூழலை இந்த சம்பவம் ஏற்படுத்திவிட்டது என்றும் எச்சரித்திருந்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை, வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் நேரில் அழைத்து இந்தியாவின் கண்ட னத்தை தெரிவித்தார். கொடூர செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாகிஸ் தான் வீரர்கள் தான் இந்த தாக்கு தலை நடத்தியதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த சம்பவம் இந்தியாவை வெகுவாக சினமூட்டி விட்டதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய வீரர் களிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி களும், ரோஸா நாளா பகுதியில் சிந்திய ரத்த மாதிரிகளும் கொலை யாளிகள் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதை உறுதிப்படுத்துகிறது என்பதையும் பாசித்திடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நமது கப்ஸா நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்த பிரதமர் மோடி கூறியதாவது: சாதாரண ராணுவ வீரர்களை கொன்றதால் பாகிஸ்தான் தப்பித்தது. நான் பாகிஸ்தான் ராணுவத்தை மன்னித்து விட்டேன். அதே வேளையில், அவர்கள் நமது நாட்டு பசுக்கள் மீது கை வைத்திருந்தாலோ, அல்லது பசு மாடுகளை இழிவாக பேசியிருந்தாலோ நான் சும்மா இருக்க மாட்டேன். கண்டிப்பாக பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுத்து, போர் மூண்டிருக்கும். பாகிஸ்தான் தப்பி விட்டது என்று ஆவேசமாக சொன்னார்.

There are no comments yet