சென்னை: நடிகை குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகை குஷ்பு, தனது குடும்பத்துடன் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வசித்துவருகிறார். நேற்று இரவு தேனாம்பேட்டைப் பிரிவு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன்கால் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ‘நடிகை குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்’ என்றாராம். இந்த மிரட்டல் போன்கால் குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல்கொடுக்கப்பட்டது. உஷாரான காவல்துறையினர், நள்ளிரவு குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. மேற்கொண்டு, போன் செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குஷ்பு தற்போது நடிப்பு மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்புப் பணிகளைக் கவனித்துவருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பிலும் செயலாற்றிவருகிறார். தற்போது குஷ்பு குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்த குஷ்புவின் இரண்டாவது கணவரும் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி.

மேலும் கப்சா நிருபரிடம் கூறியதாவது: என் மனைவி குஷ்பு தந்து ‘பப்ளிமாஸ்’ தோற்றத்தால் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தார். திமுகவில் கருணாநிதியுடன் முதல் மரியாதை செய்தார். பின்னர் ஜெயா டிவியில் சில காலம் ஜன்னல் வைச்ச ஜாக்கெட் போட்டு ஜாக்பாட் புரோகிராம் பண்ணினார். தற்போது காங்கிரசில் இணைந்துள்ளதால், அது பிடிக்காத பாஜக மற்றும் அதிமுக, திமுக ஆதரவாளர்கள் கிளப்பிவிட புரளி தான் இது. கொஞ்சம் குண்டாக என் மனைவியும் குழந்தைகளும் இருப்பதால் இப்படி புரளி கிளப்பிவிட்டுவிட்டார்கள். இது பாஜகவின் திட்டமிட்ட சதிதான். வைகை ஆற்றில் தெர்மாகோல் விட்ட ராஜூ போன்ற அமைச்சர்கள் தான் காவல் நிலையத்துக்கு போன் பண்ணாமல் இதுமாதிரி 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்யும் ஐடியாவை சொல்லி இருப்பார்கள், மேலும் நான் என் மனைவி நடித்து சம்பாதித்த காசில் எடுத்த அரண்மனை பார்ட் ஒன் மற்றும் பார்டு டூ பார்த்த ரசிகர்கள் மீதும் சந்தேகம் உள்ளது என்றார்.

பகிர்

There are no comments yet