காந்திநகர்/குஜராத்: மகாத்மா காந்தி படித்த பள்ளியை அருங்காட்சியமாக்கும் அரசின் நகர்வுக்கு ஏற்றவாறு அப்பள்ளி மூடப்படுகிறது. ராஜ்கோட்டில் மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளி என அறியப்பட்ட பள்ளியை அருங்காட்சியமாக்கும் முடிவை கடந்த வருடம் குஜராத் மாநில அரசு முன்மொழிந்தது. மகாத்மா காந்தி கடந்த 1887-ம் ஆண்டு தன்னுடைய 18 வயதில் இப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அருங்காட்சியகம் ஆக்கும் முடிவை நோக்கிய எண்ணத்தில் பள்ளி நிர்வாக அதிகாரிகள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்க தொடங்கியது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி ரிவா பட்டேல் பேசுகையில், “பள்ளியை விட்டு வெளிச்செல்வதற்கான சான்றிதழ்களை மாணவர்களுக்கு நாங்கள் வழங்க தொடங்கிவிட்டோம், அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்கள் பிற பள்ளிகளில் சேர்ந்துக் கொள்ளும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார். பள்ளியை மூடிவிட்டு அதனை அருங்காட்சியகம் ஆகும் திட்டத்தை கடந்த வருடம் ராஜ்கோட் மாநகராட்சி குஜராத் மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. மாநகராட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட குஜராத் மாநில அரசு, அம்மாநில கல்வித்துறையை இதற்கான நடவடிக்கையை தொடங்குமாறும், பள்ளி கட்டிடத்தை மாநகராட்சியிடம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டு உள்ளது. ராஜ்கோட் மாநகராட்சி கமிஷனர் பி என் பானி கூறுகையில், “ரூ. 10 கோடி செலவில் பள்ளி கட்டிடத்தை அருங்காட்சியகம் ஆக்கும் பணிக்கு ஒரு ஆலோசகரை நியமனம் செய்து உள்ளோம். இந்த அருங்காட்சியமானது காந்திஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் பிற முக்கிய நபர்களின் வாழ்க்கை வரலாற்றை தாங்கி நிற்கும்,” என்றார்.

தொடக்கத்தில் ராஜ்கோட் உயர்நிலைப் பள்ளி என அறியப்பட்ட இந்த பள்ளியானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1853-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதைய நாட்களில் இந்த பள்ளிமட்டும்தான் சவுராஷ்டிரா பகுதியில் இருந்த ஒரே ஆங்கில வழி கல்வியை பயிற்றுவிக்கும் பள்ளியாகும். இப்போது இருக்கும் ஆல்ஃப்ரெட் உயர்நிலைப் பள்ளியின் கட்டிடமானது 1875-ம் ஆண்டு ஜுனகத்தின் நவாப்பால் கட்டப்பட்டது. 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய சுதந்திரத்திற்கு பின்னதாக பள்ளியானது மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளியாக பெயர் மாற்றப்பட்டது. பள்ளியின் பெயரில் காந்திஜியின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தாலும் இப்போது பள்ளி குழந்தைகளுக்கு கல்வியை பயிற்றுவிப்பதில் மோசமான பதிவையே பெற்று உள்ளது. சிலவருடங்களுக்கு முன்னதாக பள்ளியில் படித்த மாணவர்கள் பெரும்பாலானோரால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியாத நிலையே காணப்பட்டது.

இதுகுறித்து பாரத பிரதமர் பசுநேசன் மோடி ஸ்கைப் காலில் கப்சா நிருபருக்கு அளித்த பேட்டியில்: “பாபா ராம்தேவ் கிரீம் லோஷன் விற்ற காசில் பதஞ்சலி பள்ளிகள் திறக்க இருப்பதால் இங்கு படிக்கும் பன்னாடை மாணவர்களையும் மரமண்டைகளையும் அங்கு திருப்பிவிட உத்தரவிட்டு மாற்று சான்றிதழ் வழங்க சொல்லி உள்ளேன். எதிர்காலத்தில் இப்பள்ளியை ஒரு பாஜக சரித்திர நினைவிடமாக மாற்றி கோட்சேவிற்கு நினைவிடம் அமைப்போம். காந்திஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் போல நாத்தூராம் விநாயக் கோட்சே என்ற மகான் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற புனிதர் ஆவார்.. காந்தியை கொன்ற வழக்கில் மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949, அன்று நாட்டுக்காக உயிர்நீர்த்தவர். அவருக்கு இந்த வளாகத்தில் ஒரு மணிமண்டபம் அமைத்து காங்கிரஸ் நாட்டுக்கு துரோகம் இழைத்ததை வரலாற்றில் பதிவு செய்ய உள்ளேன். முன்னதாக காதிபவன் காலண்டர்களில் காந்தி ராட்டையில் நூல் நூற்பதை போன்ற படங்களை நீக்கிவிட்டு நான் ராட்டையில் நூல் நூற்கும் படங்கலை வெளியிட்டு முன்னோட்டம் பார்த்தேன். நல்ல வரவற்பு கிடைத்துள்ளது. ஆனானப்பட்ட பாபர் மசூதியை தரைமட்டமாக்கி ராமர் கோயில் கட்ட முற்பட்ட நாங்கள் எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா? என்றார்.

பகிர்

There are no comments yet