சென்னை: மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.140 கோடி பணம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவினர் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விசாரணையில் சேகர் ரெட்டி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவந்தன. மணல் குவாரிகளை நடத்தி வந்த சேகர் ரெட்டி, அதில் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது. இது தொடர்பாக அரசில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அப்போது தகவல் வெளியானது.
மணல் மாபியா சேகர் ரெட்டியின் டைரி குறிப்புகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் புள்ளிகளின் தூக்கத்தை கெடுக்கப் போகிறது. வருமான வரி அதிகாரிகள் சேகர் ரெட்டியின் டைரியில் இருந்த முக்கிய குறிப்புகளை தமிழக முதன்மை செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. பெயர் வெளியிட விரும்பாத வருமான அதிகாரி கூறுகையில், “சேகர் ரெட்டியின் டைரியில் கண்ட முக்கிய தொடர்புகளின் பெயர்களை நாங்கள் முதன்மை செயலருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறை அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறது. நாங்களே தொடர்பு கொண்டபோதும் ஊழலில் தொடர்புடையவர்கள் வாயில் பெவிகால் போட்டு ஒட்டியதைப்போல் ‘கம்’ மென்று இருந்தனர்.” என்றார். சேகர் ரெட்டியின் டைரியில் 300 கோடி ரூபாய்க்கும் மேலாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும், மற்றும் இதர ஊழல் பெருச்சாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. சேகர் ரெட்டியிடம் கணக்கில் வராத 37 கோடி சொத்துக்களும், 140 கோடி ரூபாய்க்கு புதிய 2000 மற்றும் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. டைரிக் குறிப்புகளை வைத்தே ராம மோகன் ராவ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டது. ராம மோகன் ராவை தவிர மற்ற மூவர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். சேகர் ரெட்டி கைதானது முதலே விஜபாஸ்கர் மீதான் எங்கள் பார்வை வலுப்பெற்றது. மற்ற ஊழல் பெருச்சாளிக்களின் வழக்கத்திற்கு மாறாக, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், செயலர்கள் என அனைவருக்கும் வள்ளல் என வாரி வழங்கிய தொகைக்கு கடைசி ரூபாய் வரை கணக்கு எழுதி வைத்திருந்தது பெரிதும் உதவி புரிந்தது.
தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளின் ஊழலின் அடுத்த கட்டமாக தென் கொரிய கார் கம்பெனியான கியா மோட்டார்ஸ் தமிழகத்தில் தனது தாயாரிப்பு நிறுவனத்தை நிறுவ இருந்தது. தமிழகம் முதல் இடத்திலும், குஜராத் மற்றும் ஐதராபாத் இரண்டாம் மூன்றாம் தேர்வாகவும் இருந்தது. சிப்காட் நிறுவனத்தின் ஒரகடம் வளாகத்தில் போதுமான இட வசதியும் இருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் நிலமதிப்பில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான தொகையை லஞ்சமாக கேட்டதால், அதிர்ந்து போனது கியா நிறுவனம். கியா நிறுவனம், சாலை வசதி, மின்சாரம், தண்ணீர் வசதி என கேட்டபோது அதற்கு தனியாக மிகப் பெரும் தொகையை லஞ்சமகத் தரவேண்டும் என தமிழக. அரசியல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கியா நிறுவன தொழிற்சாலை தவிர 70க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான துணை தொழிற்சாலைகள் அருகாமையில் அமைக்கப்படவும் வாய்ப்பு இருந்தது. ஊழல் பெருச்சாளிகளுக்கு தீனி போட பணமும் மனமுமில்லாததால், கியா நிறுவனம் ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்திற்கு போய்விட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல சலுகைகளை வழங்கி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு 200 அடி நெடுஞ்சாலைகள் அமைத்து தருவதாக உறுதி அளித்து, கியா நிறுவனத்தை தங்கள் வயப்படுத்திக் கொண்டுள்ளது தமிழகத்திற்கு பெருத்த அவப்பெயரை உண்டு பண்ணி விட்டது. தமிழகம் இவ்வாறு ஊழலில் திளைத்திருந்தால், விரைவில் அன்னிய கம்பெனிகளின் தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும். இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் அல்லது ஜனாதிபதி ஆட்சி வந்தால் தேவலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பும் எதிர்காலமும், இந்த ஊழல் பன்றிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது.
There are no comments yet
Or use one of these social networks