சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பான மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா ரஜினியை சந்தித்தார். தமிழகத்தின் எதிர்காலம் ‘எசகுபிசகாக’ போய்க்கொண்டிருக்கும் வேளையில் இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகம் வரும்போதெல்லாம் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ரஜினியை சந்திப்பதும் பாஜகவில் இணைய வலியுறுத்துவதும் வாடிக்கை. இருபது வருடங்களுக்கு முன் ரஜினி – நக்மா இணைந்து நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது, இப்படத்தின் வெற்றி விழாவில் தமிழக அரசியல் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சந்திப்பின் போது அந்த காலகட்ட நினைவுகளை இருவரும் பகிர்ந்துகொண்டதாகவும், காங்கிரஸ் கட்சியில் ரஜினி சேர வேண்டும் என்று நக்மா வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ரஜினி பட்டும்படாமல் பதிலளிது நக்மாவை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பல்வேறு கட்சிகள் முயன்று வரும் நிலையில்_மிகப் பெரிய மாஸ் கொண்ட ஹீரோவான ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் தமிழகத்தில் நம் கட்சி வலுவாக காலூன்றும் என்ற நம்பிக்கையில் பாஜக தூண்டில் போட்டது. இதற்கு அச்சாரமாக கடந்த லோக்சபா தேர்தலின் போது ரஜினிகாந்தை பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரனும் ரஜினியை சந்தித்தார். அவருக்கு ரஜினி ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். ஆனால் தேர்தல் ரத்தாகி ‘புஸ்’ ஆனது. இதற்கு ரஜினி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக ரஜினிகாந்தை நிறுத்த பாஜக தீவிரம் காட்டியதாக ஒரு புரளி கிளம்பியது. விவசாயிகள் போராட்டத்தின் போது டில்லியில் அரை நிர்வாண விவசாயிகளை சந்தித்து புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடிய நக்மா, பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு என்று பேசி வருகிறார். இந்நிலையில் அவர் போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.
பின்னர் கப்ஸா செய்தியாளர்களிடம் பேசிய நக்மா: ‘ரஜினியுடன் இணைந்து நான் நடித்த ‘பாட்ஷா’ படம் மாபெரும் வெற்றி பெற்று இன்று வரை ஒரு ‘மாஸ்’ படமாக திகழ்கிறது, பல முறை தேசிய விருது பெற்ற வைரமுத்து எழுதிய ஸ்டைலு ஸ்டைலுதான் பாடலில் வரும் ‘ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி’ பாடல் மிகப் பிரசித்தம். தற்போது மீண்டும் ரஜினி ‘ஓலா’ ஆட்டோ ஓட்டுவதாக ரீ-ப்ராண்டிங் செய்யப்பட்டு புத்தம் புதிய காப்பியாக திரயரங்குகளில் வெளியாக ரசிகர்களின் வெறுப்புக்கும், கிண்டலுக்கும் ஆளானது. ஆனால் எனக்கு ஒரு மறுவிளம்பரம் போல் அமைந்துவிட்டது, எங்களுடைய சந்திப்பு அரசியல் சார்ந்தது அல்ல, சினிமா சார்ந்தது. அனால் மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டத்திற்கு ரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன். எனவே மலேசிய தமிழர்களுக்காக ரஜினி மலேசிய டானாக நடித்து தோல்வியை தழுவிய கபாலி படத்தை தொட்ர்ந்து, பாகுபலி போல், தமிழக வரலாற்றில் சங்ககாலத்தில் நடந்த தலித் கொடுமைகளை மையமாக வைத்து போர்க் காட்சிகளுடன், பிரமாண்டமாக ‘கபாகுபலி’ என்ற படத்தை துவக்க உள்ளோம். நான் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு, காங்கிரஸ் சார்பில் மீண்டும் பாகுபலி போல் ஒரு 1000 கோடி சாதனையை படைப்போம், படத்தில் என் குத்தாட்டம் நிச்சயம் உண்டு.” என்றார்
There are no comments yet
Or use one of these social networks