சென்னை: தமிழக அரசியலில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல், ‘தலித்’ என்ற ஒற்றை சொல்லை வைத்து சாதி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நல கூட்டணி பிளவு, அரசியல் எதிர்காலம் குறித்து நாடி சோதிடம் பார்க்க வைத்தீஸ்வரன் கோவில் சென்றதாக கப்சா நிருபர் கண்டறிந்துள்ளார். இது குறித்து திருமா கப்சா நிருபரிடம் அளவளாவினார்” “சோதிடம், ஜாதகம், ராசி பலன், பெயர் ராசி, எண் கணிதம், வாஸ்து, கைரேகை, மச்ச பலன், அங்க லட்சணம், யோனி பொருத்தம், நாடி சோதிடம்…. என்று ஒரு நூறு மடத்தனங்களும் ஆரியக் கலாச்சாரத்திலிருந்து வந்த, இந்து மத மூடத்தடனங்களாகும். இந்த முட்டாள்தனங்களை ”ஐதீகம்” என்று சொல்லி நீண்ட காலமாகப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புத் தொழிலாகச் செய்து கொண்டிருந்தார்கள். மூலதனம் தேவையில்லாத இந்த மோசடித் தொழிலுக்கு மூடர்களே வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர், அவர்களை பற்றிய உண்மைகளை வெட்டவெளிச்சமாக்க மாறுவேடத்தில் சென்ற நான் (திருமா) முதலாளிகளை வேலை வாங்கிய தலித்துகள் குறித்த ஓலைச்சுவடிகளை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் டைம் மெஷின் மூலம் பல நூறாண்டுகள் பின்னோக்கி சென்று எங்களது மூதாதையர் பற்றிய உண்மைகளை பனை ஓலை மூலம் கண்டறிந்தேன் என்றார்.

திருமாவால் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பனைஓலைச் சுவடியில் நாஞ்சில் நாட்டில் அடிமை வியாபாரம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. நாஞ்சில் நாடு தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். தென் திருவாங்கூரின் அட்சயப்பாத்திரம் என்று கருதப்படும் நாஞ்சில் நாட்டின் பசுமையான வயல்வெளிகளுக்கு அடியில் இத்தகைய அடிமை வியாபார வரலாறு புதைந்து கிடக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இப்பகுதியில் அடிமைமுறை வெகு சகஜமாக இருந்து வந்துள்ளது. இந்த ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட இன்னொரு தகவல் சுவாரசியமானது, திருவாங்கூர் மன்னர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த, நிலம் வைத்திருந்த வேளாளச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் வறுமையின் கோரப்பிடியில் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர், மாறாக அடிமைகளாக விற்கப்பட்டவர்களான தலித்துகளில் ஒரு சிலர் நிலவுடைமைதாரர்களாக இருந்துள்ளனர். “1601-ம் ஆண்டு ஓலைச்சுவடி பதிவொன்றில் அவையாத்தான், கோணாத்தான் என்ற இரண்டு தலித்கள் தங்களிடமிருந்த நிலங்களை விற்றதற்கான குறிப்பு இடம்பெற்றுள்ளது. எனவே தலித்களில் சிலர் நிலச் சொந்தக்காரர்களாகவும் இருந்துள்ளனர். நடப்பு காலத்திய நிலவரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக செல்வந்த தலித்துகள் பற்றி இந்த ஓலைச்சுவடிகள் பேசுகின்றன. 1462-ம் ஆண்டு ஓலை ஒன்றில், சம்பந்தன் செட்டி என்பவர் ‘கலியுக ராமன் பணம்’ (அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்த பணம்) நான்கை வாங்கியதான குறிப்பு காணக்கிடைக்கிறது. அதாவது சாம்பவர் சாதியைச் சேர்ந்த கேசவன் என்பவரிடமிருந்து வாங்கியதாக குறிப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த சாம்பவர் பிரிவு தலித்துகளின் ஒரு பிரிவினரே. 1484-ம் ஆண்டு ஓலையில் ‘பெரும்பறையன் என்பாரின் சொத்துக்கு தெற்கே’ என்ற குறிப்பு காணப்படுகிறது. இதற்க்கு காரணம் வறுமைதான். 1458-ம் ஆண்டு சுவடியில் அடிமை ஒருவர் கூறுவதான குறிப்பில், “வறுமையின் காரணமாகவே நாங்கள் எங்களை விற்றுக் கொண்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் வாங்கிய கடன் மற்றும் வட்டித் தொகையை கொடுக்க முடியாமல் தந்தையும் மகளும் கொத்தடிமைகளாக மாறியதை இன்னொரு சுவடி விவரித்துள்ளது.

எனவே இச்சுவடிகள் குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி, ஜெயலலிதா சேர்த்த சொத்துக்கள், ராம மோகன் ராவ், சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர், தினகரன் ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் சொத்துக்களையும் தலித் சொத்துக்களாக கருதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நிதியாக வழங்கி, எங்கள் கட்சி சொத்தாக அறிவித்து, நீதி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என்று பனை ஓலை போல் சலசலத்தார்.

மற்ற ஆதாரங்கள்The Hindu-Tamil
பகிர்

There are no comments yet