திருவனந்தபுரம்: கேரளவை சேர்ந்த பிரபல ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயிக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வல்லிகாவு கிராமத்தில் அமிர்தானந்த மயி ஆஸ்ரமம் உள்ளது. இவரது ஆன்மிக அமைப்பு சார்பில், இந்தியாவின் பல பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரது ஆஸ்ரமத்தின் கிளைகள் உள்ளன. இவருக்கும், இவரது ஆஸ்ரமத்திற்கும் அச்சுறுத்தல் உள்ளது என, மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமிர்தானந்தா மயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. அவரது ஆஸ்ரமத்தில், 40 கமண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர் வெளியூர்களுக்கு செல்லும் போது, பாதுகாப்பு இரண்டு வாகனங்களில் வீரர்கள் செல்வார்கள்.

யோகா குரு பாபா ராம்தேவுக்கு பிறகு, இசட் பிரிவு பாதுகாப்பு பெறும் இரண்டாவது ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா குடியிருந்தபோது, போயஸ் தோட்ட இல்லத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு சில நாட்கள் வழங்கப்பட்டு வந்தது, இதற்கு திமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பின்மையால் கொடநாடு காவலாளி கொலை, விஜயபாஸ்கர் நண்பர் மரணம் போன்ற சுபநிகழ்வுகள் அரங்கேறின. இதற்கிடையே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலாவை எதிர்த்து பன்னீர் தனி அணியை உருவாக்கினார். ஆர்கே நகர் தேர்தலின்போது சசிகலா தரப்பால் பன்னீர்செல்வம் உயிருக்கு ஆபத்து என்று கூறப்பட்டது. அதனால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி ஏந்திய 8 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி (52), ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் முக்கிய நபர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இதன்மூலம் இவ்வகை பாதுகாப்பு வழங்கப்படும் நபர்கள் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ் வருபவர்களுக்கு ஆயுதம் ஏந்திய 8 பாதுகாவலர்கள் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். ஏற்கனவே நீதாவின் கணவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாஜகவுக்கு நட்புறவுடன் உள்ள நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியிருந்தது. இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் நபர்கள் பட்டியலில் 60 பேர் உள்ளனர். இதன்படி 20 பேர் பாதுகாப்பு வழங்குவர். இதற்கும் மேலாக, உச்சபட்ச பாதுகாப்பு அல்லது ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் மிக முக்கிய நபர்கள் பட்டியலில் 55 பேர் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, ஆயுதம் ஏந்திய 45 பேர் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தப் பட்டியலில் 20 பேர் மட்டுமே இருந்தனர்.

பாஜக பக்தாள் ஒருவர் கப்சா நிருபரிடம். “உத்திரபிரதேசத்தில், யோகி ஆட்சி அமோகமாக நடக்கிறது. அவர் புலியுடன் கொஞ்சி விளையாடுவதாலும், மோடிக்கு நெருக்கம் என்பதாலும் அவருக்கு பாதுகாப்பு தேவை இல்லை. பாபாஜி போன்ற முற்றும் துறந்து பல பிசினஸ்களை திறந்த முனிவர்களுக்கு எதற்கு பாதுகாப்பு என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். கோடிக் கணக்கில் பணம் புரளுவதால் அவர்களைக் கண்காணிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கே உயிர் பயம் என்றால் இவர்களை பின் பற்றிச்செல்வோருக்கு என்ன ஆவது? ஓட்டு குறைந்துவிடும். கோடிக்கணக்கில் வருமானம் வரும் இவர்களுக்கு, அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து பாதுகாப்பு கொடுத்தால்தால் தேர்தல் சமயங்களில் வட்டியுடன் திருப்பி வாங்க முடியும். இருக்கும் கமாண்டோக்கள் எல்லாம் மடங்களுக்கு சென்று விட்டதால், புதிதாக ஆள் எடுக்கப் போகிறோம், நம்ம ஆர் எஸ் எஸ் தோழர்கள் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு ஒரு இரும்புப் பெண்மணியாக ஜெயலலிதா கிடைத்தது போல் பாஜக கேரள அரசியலில் களம் காண் புதிய அம்மா மாதா அமிர்தானந்தமயி கிடைத்துவிட்டார். பினராயி விஜயன் தலைமையிலான, மா.கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவில், அடுத்த முறை தாமரையை மலர வைப்பதே மோடியின் லட்சியம்..” என்றார்

பகிர்

There are no comments yet